Tuesday, July 16, 2013

WAY TO அங்காடிதெரு



ந்த இனிய மாலை நேரம் .சுகமான  தென்றலை  கிழித்துக்கொண்டு  சென்றது  நான் பயணிக்கும்  ரயில் . கல்லுரி மாணவர்கள் ,பொது மக்கள் ,தினமும்  தொடர்ச்சியாக  பயணம் மேற்கொள்ளும்   தினசரி  பயணிகள்  என எல்லா வழக்கமான  காரியங்களும்  நடந்தேறினாலும்  ஏதோ  ஒரு குறை  இருப்பதாக என்மனம் நினைக்கிறது .ஆம்    தற்க்காலத்தில்  யாரும்  யாருடனும்  பேசிக்கொள்வதை  பார்க்க முடி தில்லை .
                     
ஒவ்வொரு  பயணியும்  வாக்மேன்  வைத்துக்கொண்டு  மொபைலில்  பாட்டு கேட்டு கொண்டிருக்கிறார்கள் . யாராவது  தெரிந்த முகம் போல் இருந்தாலும்  ஒரு  புன்னகை மட்டுமே  வெளிப்படுவதை காணலாம்   ,அதிகபட்சமாக  ஹாய்  என கூறுவதுதான் .அதற்க்கு மேல் இருவருக்குமே  வாய் திறப்பதில்லை .சிலர்  மொபைல் கேம் விளையாடுகிறார்கள் ,சிலர்  இன்டர்நெட்  பயன்படுத்துகிறார்கள் .சிலர் மடிக்கணினியில்  மூழ்கியுள்ளனர் .யாரிடமும்  ஒரு குமுதமோ, ஆனந்த விகடனோ கூட   பார்க்க முடியவில்லை . ஒரு பெரியவர்  தினமலர் படித்துக்கொண்டிருப்பதை பார்த்து  சற்று ஆனந்தத்துடன்  அவர் அருகில் சென்றேன் .அவருக்கு  மொபைல் போன்  பயன்படுத்த தெரிந்திருக்காது என்று நானே  நினைத்துக்கொண்டேன் . என்னை அறிமுக படுத்திக்கொண்டு  நாளிதழின்  சில  பக்கங்களை  பெற்றுக்கொண்டேன் . இவரிடம் கூட நான் மட்டுமே  பேசினேன்  அவர்  ஒன்றும் பேசவில்லை .பிறகுதான் தெரிந்தது  அவருக்கு  காது  கேட்கும் சக்தி குறைவு  என்று .
                       
சுமார்  15 ஆண்டுகட்கு முன்  ரயில் பயணம் என்பது ஒரு சுகமாக  இருந்தது . நண்பர்களுடன்  பாட்டு பாடி ,சிலர் மிமிக்ரி செய்வார்கள் . காலி  டிபன் பாக்சை  அடித்து  இசையை  உண்டாக்குவார்கள் .கல்லுரி மாணவர்களின் கலாட்டா  ஒருபுறம் என்றால்  முதிர்ந்தவர்களின்  அரசியல் அரட்டை  ஒருபுறம்வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்த  முறுக்கை  தின்றவாறு, பெண்களிடம்  கடலை போடும்  வித்தையை  நண்பர்கள்  கூற கேட்டு   சிரித்து  மகிழ்வோம் .
புதுமண தம்பதிகள்  உரசல்  சில்மிஷங்களை  ஓரக்கண்ணால் பார்ப்போம் . சில நேரம்   வீட்டை விட்டு ஓடிப்போகும் காதல் ஜோடிகள்  கண்களில் பயமும்  கனவில்  தைரியத்துடனும்  ஒதுங்கி இருப்பதை காணலாம் .

                       
இதுமாதிரிதான்  நொண்டி மாரிமுத்து  பையன்   சுடலப்பாண்டி   ஸ்டெல்லாவை   கூட்டிட்டு    ஓடிப்போக  ரயிலில்  ஏறும்போது   ஸ்டெல்லா வீட்டுக்காரங்க   சுடலப்பாண்டி கால ஒடச்சி  நொன்டியாக்கி விட்டனர் .
.
நான் யாரிட மாவது  பேசணுமே  சரி  அடுத்த கம்பார்ட் மென்ல  பாக்கலாம்  என  சென்றேன்இளம் தம்பதிகள்  கை குழந்தையுடன்  இருந்தனர் .நான் ஹலோ  சொல்லி  அறிமுகப்பட்டேன்   அவரிடம்    என் மனக்குறையை  சொன்னபோது  அவரும்  ஆமோதித்தார்  ஆனாலும் எங்கள் உரையாடல்  அதிக நேரம் நீடிக்கவில்லை , குழந்தை  ஏனோஅழுதது . பால் கொடுக்க  வேண்டும் போல  அவர்   என்னைப் பார்க்க  நான்   இடப்பெயர்ச்சி  செய்தேன் .
சற்று நேரம்  ஜன்னலோரம் இருந்து  இயற்கை காட்சிகளை  கண்டு களித்தேன்
சற்று தொலைவில்   இருவர்  உரையாடுவது தெரிந்து  அருகில் சென்றேன் .அவர்களோ  7up  இல்  உற்சாக பானம்  கலந்து  யாருக்கும் தெரியாதவாறு  பருகி கொண்டிருந்தனர் . அவர்களிடம் இருந்தும்  விலகினேன் .
    அந்த நேரத்தில் தான்  இந்த  18 வது மதிக்க தக்க சிறுவனை கண்டேன் . அவன்பெயர்  வேடியப்பன் .மிகவும் சோகமாக இருந்தான் ." என்னப்பா   சோகமா இருக்க ? டிக்கெட் எடுக்கலியா ?" என்று கேட்டேன் . அவன் சொந்த கதை  சோககதை  , அவன் அம்மா  வை  நினைத்து  அழுதான் . இவன்  அம்மா  குடிகார கணவனின்  இடி தாங்கி யாக இருப்பதை அறிந்தேன் . இவனையும்  தீப்பெட்டி கம்பனிக்கு போக சொல்லி  உதைப்பதாக சொன்னான் .
எனது  மனம் கனத்தது . எங்கே செல்கிறாய்என்றேன்  .சென்னைக்கு  என்று மட்டும் சொன்னான் .நான்  இறங்க வேண்டிய இடம்  வந்ததால்   அவசரமாக இறங்கிவிட்டேன் .
இப்போது  நான் நினைத்துப்பார்க்கிறேன்  அவன்  அங்காடிதெரு  சினிமா  பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று !....

Sunday, March 31, 2013

புன்னகை அதிபர்



நான் கனடாவில்  இருந்தபோது  பல நாட்களாக  அங்கு செல்ல  வேண்டும் என்ற  ஆவலில் இருந்தேன் ஒரு நாள்   அந்த வாய்ப்பு  அமைந்ததால்   நானும்  ரவியும்  அங்கு சென்றோம் . அது ஒரு  விநோத மனோதத்துவ மையம் . உங்களுக்கு  மன ரீதியான  பாதிப்போ? ,யாரயாவது  பழி  வாங்கவேண்டும் என்ற  உணர்ச்சியோ?   ,மன அழுத்தமோஎது வாக  இருந்தாலும் நீங்களும் இங்கு வருவது  நல்லது

 
எனக்கு  மன அழுத்தம் ஒன்றும் இல்லை  ஜஸ்ட்  பார்வையிடவேண்டும்  என்று தீர்மானித்தேன் .ஆனால் ரவியோ  நீண்ட நாட்களாக ஒரு விஷயத்தை  சொல்லி வருகிறான் .அது  அவன் கனவு கன்னியான  மூன்றெழுத்து  முண்டக்கன்னி  இவள் நடிகை மட்டுமல்ல  முன்னாள் உலக அழகியும்  கூட .அவளுடன் ஒரு  மணிநேரம்  செலவிட வேண்டும் என்று .

 
நாங்கள்  சென்ற  போது  எங்களை அன்புடன்  வரவேற்ற  அந்த  புன்னகை அதிபர் உண்மையில் இந்த  மையத்தின்  உரிமையாளர்  என்பதை  அறிந்தோம் . வாரத்தில் இருமுறை மட்டுமே  அவர் வருவார் என்ற தகவலும் அங்கே பேசிக்கொண்டார்கள்  மற்றபடி  சிகிட்சை  மற்றும் செயல்முறை விளக்கம் கொடுப்பதற்கென்றே  ஒரு டீம் அங்கு
செயல்பட்டு வருகிறது .1 கிலோமீட்டர்  சுற்றளவில்  பூங்கா வுடன் கூடிய கட்டிடங்கள் .
ஒரு பணியாளர்  எங்களை  ஒவ்வொரு  அறையாக  காண்பித்து கொண்டு சென்றார்கள் .முதல் அறையில்  நாங்கள் கண்டது ,ஒரு மாணவன்  அவனது  ஆசிரியரை   துப்பாக்கியால் சுட்டு விட்டு  கதறி அழுகிறான்  அவனை  கட்டியணைத்து  ஆறுதல் சொல்கிறார்  ஒரு ஒருங்கிணைப்பாளர் " நீ சுட்டது  ஆசிரியரை போன்ற பொம்மையைத் தானே " என்று பிறகு  அவரது  அறிவுரை . உண்மையில் இந்த மாணவன் இதை போல செய்திருந்தால்  சம்பவிக்கும் விளைவுகளை  எடுத்துரைத்தார் .

நாங்கள் கண்ட அடுத்த அறை  காட்சி  மிகவும்  கொடூரமானது .ஒருவன்  தன்  மனைவியை போல்  செய்யப்பட்ட  பொம்மையை  கத்தியால்  மாறி  மாறி  குத்திக்கொண்டிருந்தான் ..
அடுத்ததாக  ரவியை  ஒரு அறைக்கு  அழைத்து சென்றார்கள் .அந்த  அறை  முழுவதும்  பல டிஜிட்டல்  பானரில்  ரவியின்  கனவு கன்னி  சிரிக்கிறாள் .மங்கலான  வெளிச்சத்தில்   சோபாவில்  இயல்பாக அமர்ந்து இருந்தாள் ,என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை  நளினமான ரோபோ விற்கு  நடிகையின்  மாஸ்க்  தான் இது என்றுஅவ்வளவு  தத்ரூபமாக இருந்தது .எப்படியோ ரவிக்கும் இது ஒருவகை மனநோய் தானே ,இன்றோடு மாறட்டும் இந்நோய் .

கடைசியாக  நாங்கள்  பார்வையிட்ட அறையில்  ஒரு பெண் தனது காதலை எதிர்த்த தந்தையின்  நெஞ்சில்  குறி பார்த்து  சுட்டுக்கொண்டிருந்தாள் .ஒரு கணம்  அதிர்ந்தோம் . அடஇது  நம்மை வரவேற்ற  புன்னகை  அதிபர்  ஆயிற்றே ! ?