Friday, September 28, 2012

இட்டி ! பாஞ்சாறு !

இட்டி !   பாஞ்சாறு !

தொட்டில் பழக்கம்  சுடுகாடு மட்டும்  என்பார்கள் .அது  சரியான   பழமொழி  என்றே  எனக்கு தோன்றுகிறது .ஏனென்றால்  இதுவரை  அப்படி  சில பழக்க வழக்கங்கள்  மாறாமல் உள்ளது. குறிப்பாக  உணவு பழக்கம் .தினமும் காலையும் இரவும்   இட்லி  சாப்பிடுவது   எனக்கு  பிடித்தமான ஒன்றாகும். இருபது   வருடமாக  இவ்வாறு  சாப்பிட்டு  வருகிறேன்  ஆனாலும் அலுப்பு  ஏற்படுவதில்லை .
கும்பகோணத்தில்  வாழ்ந்து  வந்தபோது  , அங்கு  மிகவும் SOFT  ஆன இட்லி   கிடைத்தது. அங்கு  மல்லிகபூ  இட்லி  என்பார்கள் .சில சமயம்  உணவகங்களில்  25 இட்லி வரை சாப்பிட்டதுண்டு. இன்றோ  6 க்கு  கூடுதல்  சாப்பிட  முடிவதில்லை ,ஆனாலும்  இட்லி மட்டுமே எனக்கு   விருப்ப உணவு .
    கோயமுத்தூரில்  சிலகாலம்  இருந்த பொது  அங்கு குஷ்பு  இட்லி  விருப்பமானது .நடிகை  குஷ்பு  எனக்கு  பிடித்த நடிகை அல்ல .அனால்  குஷ்பு  என்ற  பெயர் கொண்ட  அந்த  வகை இட்லி எனக்கு பிடித்துவிட்டது .மற்றபடி  பெயர் காரணத்தை  நான் அறிந்து கொள்ள விருப்பபடவும் இல்லை
    நீண்ட நாள் காணமல் இருந்து   திடீரென்று  சந்திக்கும் சில நண்பர்கள்  என்னை கேட்பதுண்டு    " என்ன  மாப்ள  இப்படி  சத  போட்டுட்ட !, இட்லி மாறி உப்பிபோயிட்ட  "  " தொப்பைய  குறச்சுக்கோ" என்று  கேட்டு  அலுத்து போய்விட்டது  .இட்லியை  குறைத்து விட்டேன்   ஆனால்   தொப்பை மட்டும்  குறையவில்லை .
ஜீன்  என்பார்களே  , நமது  பழக்க வழக்கம்  நமது  குழந்தைகளுக்கும்  வரும் என்று கேட்டதுண்டு  இப்போது  உணருகிறேன் . எனது ஒன்னேகால் வயது   மகன்  கேட்கத்தொடங்கிவிட்டான்  இட்லி  சாம்பாரை , எப்படி என்று  கேட்கிறீர்களா ?  தலைப்பை  மீண்டும்  வாசியுங்கள் ..