Friday, June 29, 2012

சர்டிபிகட்

எனது  பத்தாம் வகுப்பு  தேர்வு  முடிந்து ரிசல்ட்  வந்த சமயம்  . நான்  தேறிவிட்டேன்  எனது  நண்பன்  ராம் குமாரோ  தவறிவிட்டான். அவனது  சித்தப்பா அவனை  கேலி  செய்தார் , அதற்க்கு  அவனோ  " சர்டிபிகட்  வச்சிக்கிட்டு   நாக்க வடிக்கறதா ?  " என்று  கேட்டு விட்டான்.  பிறகு
1999 இல்  கோனேரிராஜபுரம்  அக்கரை தெருவில்  இருந்து  கோயமுத்தூர்  சென்று  விட்டோம் .  மூன்று  ஆண்டுகள்  கழித்து   கோனேரிராஜபுரம் வந்தேன் ,கொஞ்சம்  வேலை இருந்தது அங்கு . அப்போது  சில   நண்பர்களை  கண்டு  நலம்  விசாரித்தேன் . அப்போது  ஒரு கிராம வாசி சொன்னார்   "உன் தோழன்   நம்ம  ராம்குமார்  கம்ப்யூட்டர்  படிக்க   கும்பகோணம்  போரம்பா " படிச்சு முடிச்சா  மலேசியா  வில்  வேலை கிடைக்கும்னு  சொன்னார் .
எனக்கு  அதிசயமாக  இருந்தது , இருந்தாலும்  கம்ப்யூட்டர்  படிப்பது  நல்ல விஷயம் தானே !  எனவே  சந்தோஷப்பட்டேன் .
மறுநாள்   எதோட்சையாக  ராம்குமாரை  கண்டபோது   கம்ப்யூட்டர்  மேட்டரை பத்தி  கேட்டேன் .
  "மாப்ள  நான்  கம்பி பிட்டர் ட்ரைனிங்  தான் போறேன் " என்றான் . அதன் பின் மீண்டும்  நான் கோயமுத்தூர்  போய்விட்டேன் .
சரியாக  இரண்டு வருடம்  ஓமன்( மஸ்கட் )  சென்று  வந்தேன் . மீண்டும்  கோனேரிராஜபுரம்  சென்றேன் . அப்போது  மீண்டும்  நண்பர்களை  கண்டு  பேசியபோது  நம்ம  ராம்குமார்  மலேயசியாவில்  safety officer  ஆக  உள்ளதாக  சொன்னார்கள் . அவன்  எப்போது  அதற்க்கான   படிப்பை  முடித்தான்  என்று கேட்டேன்! , தொடங்கினால் தானே முடிப்பதற்கு ?.  பணம் கொடுத்து  certificate  வாங்கியதாக  சொன்னார்கள் . எப்படியோ  நம்ம  நண்பன்  வெளிநாட்டில்  நல்ல வேலையில் இருந்தால் நல்லதுதான் .
ஆனாலும்  சர்டிபிகட்  என்பது  நாக்கு வடிக்க அல்ல  என்பது  தற்போது  புரிந்திருக்கும் .

6 comments:

  1. சதீஷ் ...

    என்றும் கைகொடுக்கக் கூடியது கல்வி ஒன்றுதான்.

    துரைஅரசன்

    ReplyDelete
  2. மிக்க நன்றி அய்யா
    மேலான கருத்திற்கும் !
    எனது வலைப்பூவின் வருகைக்கும் !

    சதீஷ் குமார்

    ReplyDelete
  3. சரிதான் .... யாரும் பாடிப்பது இல்லை

    ReplyDelete
  4. சரிதான் .... யாரும் பாடிப்பது இல்லை

    ReplyDelete
  5. சரிதான் .... யாரும் பாடிப்பது இல்லை

    ReplyDelete
  6. சரிதான் .... யாரும் பாடிப்பது இல்லை

    ReplyDelete