அந்த நாள் அக்டோபர் 22 ,2006 நான் முதன் முதலாக ஷம்கியா என்ற கப்பலில் பயணம் செய்த நாள் .நீங்கள் நினைப்பது போல் சொகுசு கப்பல் அல்ல ,இது சிறியவகை கப்பல் .கார் முதலான வாகனங்களை இக்கரையில் இருந்து அக்கரையில் கொண்டு சேர்ப்பது . கப்பலில் முதன்
முதலாக செல்லும் போது யாராக இருந்தாலும் அவர்களுக்கு தலைசுற்றல்
வாந்தி ஏற்ப்படுவது இயல்பு ஆனால் ,எனக்கு அவ்வாறு இல்லை .உற்சாகமாக
இருந்தேன் என்னுடன் பணியில் இருந்த செல்லையா இப்போதும் வாந்தி எடுப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள் .
கடல் பயணம் உற்சாகமாக இருந்தபோதும் ஒரு பயம் . நாம் திரும்பி வரவேண்டுமே ? என்னைக்காண நண்பனோ ? தாயோ ? உடன் பிறப்புகளோ ? காத்திருப்பார்களே !. நான் இருப்பது அரபு தேசம் ஆனாலும் இந்தியாவில் எனக்காக காத்திருக்க தானே செய்வார்கள் . எல்லா தெய்வங்களையும் நினைத்துக்கொண்டு செல்வதுண்டு .ஒருநாள் மட்டும் அல்லவே எனக்கு வேலை கப்பலில்தான் .
தினமும் அதிகாலை மசிராஹ் தீவில் இருந்து சன்னாஹ் தீப கற்பத்திற்கு செல்ல வேண்டும் .பயணம் 2 மணிநேரம் தான் .40 மைல் தொலைவு .சிலதினங்கள் இரு முறை செல்ல வேண்டிவரும் .
அவ்வாறு செல்லும்போது சில சமயம் கொடுங்காற்று அடிக்கும் .கப்பல் தள்ளாடும் .எனக்கு M G R பாட்டு மனதில் உதிக்கும் "தரை மேல் பிறக்கவைத்தான் ' என்ற பாடலை முணுமுணுப்பதுண்டு . ஒருநாள் நடு கடலில் சென்று கொண்டிருந்த பொது கடுமையான மழை சூறைக் காற்று ,கடல் சீற்றம் . எனக்கு சீனியரான பல தொழிலாளிகள் கூட பயந்து போய்விட்டார்கள் .பாபா என்ற பாகிஸ்தானி அழுதுவிட்டன் ," எனக்கு நீச்சல் தெரியாது ' என்று கூறி . எனக்குமட்டும் தெரியுமாக்கும் என்று மனதிற்குள் புலம்பினேன் .
சென்ற வாரம் தான் ஊரில் உள்ள நண்பன் முத்தப்பா விற்கு போன் போட்டு சொன்னேன் .நண்பா எனக்கு கப்பலில் வேலை கிடைச்சிருக்குன்னு .அவனோ ' உன் சாவு கடலில்தான்னு எழுதி இருந்தா யாரால தடுக்க முடியும்?" அப்படி சொல்லிப்புட்டான் . அதுமட்டுமா ? கப்பல் இடையில் நின்றால் இறங்கி தள்ளனுமே என்று கவுண்டமணி திரைப்படத்தில் கூறியதை எடுத்துவிட்டான் .ஒரு வழியாக கரை சேர்ந்தோம் .
எங்களுக்கு உணவு ,உறக்கம் எல்லாம் கப்பலில் தான் .ஓய்வு நேரத்தில் அங்கு இருந்தபடியே மீன் பிடிப்பேன் .நான் எப்போது தூண்டில் போட்டாலும் மீன் கிடைக்கும் .அது என் ராசிதான் . பிறகென்ன பலுசிஸ்தானி ரமீஸ் நன்றாக குழம்பு வைப்பான் .நான் நன்றாக சாப்பிடுவேன் . பாகிஸ்தான் காரன்தான் ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது கைப்பக்குவத்தை .
அன்றைய தினம் கொரியன் மீன் பிடிக் கப்பல் ஒஷணிக்- 5 நடுக்கடலில் எங்களுக்காக காத்திருந்தது .எங்கள் கப்பலில் டீஸல் டாங்கில் டீசல் நிரப்பி அவர்களுக்கு விற்பதற்காக செல்ல விருந்தோம் .வானம் கருத்திருந்தது .ஒரு சில வெள்ளைக் காகங்கள் வட்டமடித்து சென்றது .பிஸ்கட் , பச்சை ஆப்பிள் ,பெப்சி ஒன்றும் ஸ்டாக் இல்லை .காரணம் கரையில் நேற்று வாங்கவேண்டிய பொருட்கள் ஒன்றும் வாங்கவில்லை ,கேப்டன் உம்மர் கொடுத்த பியரை குடித்ததுதான் கடை வீதி செல்ல முடியாமல் போனது .பாக்கெட்டை தொட்டுப்பார்த்தேன் 9 சிகரட் மீதம் இருந்தது. புறப்பட்டோம்
சரியாக 2 மணி நேரத்தில் நடுக்கடலில் ஒஷணிக்- 5 ஐ அடைந்தோம் .எங்கள் கப்பலில் இருந்து கயிற்றை ஒஷணிக்- 5 ஐ நோக்கி வீசினோம் அவர்கள் அதை கைப்பற்றி அவர்கள் கப்பலில் நன்றாக கட்டினர் .அதுபோல் அவர்களது கயிறை எங்கள் கப்பலில் கட்டி இணைத்தோம் இவ்வாறு செய்வது தான் மரபு . டீசல் அடிக்க தொடங்கினோம் மழையும் தொடங்கியது .இப்போது அடிக்கும் காற்றை விவரிக்க இயலாது . சூரைக் காற்றோ? சுழல் காற்றோ ? ராமேஸ்வரம் மீனவர்களுக்கே வெளிச்சம் .
பாபா நடுங்கி விட்டான் வழக்கம் போல .என்னிடம் இருந்த சிகரட் எல்லாம் முடிந்து விட்டது .கொரியாக் காரன் 12 பெப்சியும் 5 கிலோ நெய்மீனும் தந்தான் அன்பளிப்பாக?. டீசல் அடித்து முடிந்தது கரைக்கு திரும்பும் போது கேப்டன் உம்மர் சொன்னார் " போன மாசம் இந்த கொரியா கப்பலில் ஒரு மர்டர் நடந்துச்சு" " கொலை செய்து பிரீசர்ல பாடிய போட்டுருக்கான் " கேஸ் நடப்பதாக கூறினார் .நான் வெல வெலத்து போனேன் . பாவம் அவனுக்கு யார் யார் காத்திருப்பார் களோ ?

S ... Ship la nailla irukum but bayama irukum ennakum apadithan
ReplyDeleteS ... Ship la nailla irukum but bayama irukum ennakum apadithan
ReplyDelete