Friday, October 12, 2012

கனவு

     
                                கனவு 
    அன்று டக்குத்தெரு  மாரியம்மன்  கோவிலில் இருந்து  பூசாரி  காளிமுத்து  வந்திருந்தார்  எனது வீட்டிற்கு .

அவர் வந்த காரியம் இதுதான் , பூசாரியின் கனவில்  மாரியம்மன்  தோன்றி  என்  அம்மா  ஒரு குடம்  பால்  கொண்டுவருவது போல்  கனவு  கண்டாராம் . அதுபோல்  செய்யவேண்டும்  என்று  அறிவுறுத்த  வந்ததாக  கூறினார் .எனக்கு  சிரிப்பு வந்தது  ஆனால்  அடக்கிக்கொண்டேன் . பெரியவர்கள்  பேசும்போது  குறுக்கே பேசக்கூடாது  என்று  அம்மா  முன்பு  கூறியிருக்கிறார் .
   பூசாரி  போன பிறகு  அம்மாவிடம்  சொன்னேன்  இது  மூட நம்பிக்கை ,அவ்வாறு  செய்யவேண்டாம்  என்று  ஆனால்  அம்மா  என் பேச்சை கேட்கவில்லை . அவ்வாறு  செய்யாவிடின்  மாரியம்மன்  பலி வாங்கிவிடும்  என்று  சொன்னார்கள் . இதையும் பூசாரிதான்  சொல்லியிருக்க  வேண்டும் .
         அதுவும்  பித்தளை  குடத்தில் தான்  பால் கொண்டுவரவேண்டும்  என்று  சொன்னதாக  அம்மா  என்னிடம்  கூறினார் .இந்த நேரத்தில்  அந்த பூசாரியின்  ஞாபக  சக்தியை  மெச்சினேன் ! காரணம்   அந்த  பால் குடம்  எவர்சில்வரா ?  பித்தளையா ? என்று கனவில் கூட அந்த பூசாரி கவனத்தில் கொண்டுள்ளார்  அதனால்  கும்பகோணம்   சென்று  ஒரு பித்தளை  குடம்  வாங்கினோம் .
மறுநாள்  மாரியம்மன் கோவிலுக்கு சென்று  அவர் கூறியபடி  பால் குடத்தை  ஒப்படைத்து ,மாரியம்மன்  ஆசையை (?)  நிறைவேற்றி  அருள் பெற்று வந்தோம்(?) ! !
   மனிதனின்  ஆசையை  அவரவர்  பேச்சில்  அறியலாம் . ஆனால்  இறைவனின் ? ஆசையை அறிவது கடினம்  ,இது போல  பூசாரிகளின்  மூலமாகத்தான்  தெய்வம்  தெரிவிக்கும்  என்று  என் அம்மா நம்பிவந்தார் .

       நாம் காணும்  கனவுகள்  மெய்ப்பட வேண்டும் என்று  எல்லோரும்  விரும்புவது  இயல்புதான். ஆனால்  நல்ல கனவுகள் மட்டும்  நடக்க வேண்டும் என்று  நினைப்பது  சுயநலம்  என்று நான் நினைக்கவில்லை .நான் ஒருநாள்  கண்ட கனவு  ஒரு பெரிய பயத்தை உண்டாக்கியது ,நான்  தேம்பித் தேம்பி  அழுகிறேன்,என்னை சுற்றி  என் உறவினர்  உடன்பிறப்புக்கள்  அனைவரும்  அழுகின்றனர் .இவ்வளவு ஏன் அங்கு  பிணமாக  கிடப்பது கூட  நான்தான் ,என்  சாவிற்கு  நான் அழுவது  கனவில் மட்டுமே நடக்க கூடியதுதான் .அதனால்  பயம் தெளிந்தது .
ஒருநாள்  எதோட்சையாக  மாரியம்மன்  கோவில் வழியாக சென்றபோது  கோவில் குளத்தில் பூசாரி  குளித்துக் கொண்டிருந்தார்  நாம் வழங்கிய  குடத்தைப் பயன்படுத்தி . இதை  அம்மாவிடம்  சொல்லவில்லை  ஆனால்  வேறொன்று சொன்னேன்   
    " நம்ம நேரம்   பூசாரி  பால் குடத்தை மட்டும் தான்  கனவு கண்டார் !  அல்லாமல்  கோவில்  கட்டுவதுபோல்   கனவு வரவில்லை !.

5 comments:

  1. ஆமாம் கோயில் கட்டினா என்ன ஆகுறது .... நிறைய பெண்கள் வருவாங்க ... Supper ah irukum

    ReplyDelete
  2. ஆமாம் கோயில் கட்டினா என்ன ஆகுறது .... நிறைய பெண்கள் வருவாங்க ... Supper ah irukum

    ReplyDelete
  3. ஆமாம் கோயில் கட்டினா என்ன ஆகுறது .... நிறைய பெண்கள் வருவாங்க ... Supper ah irukum

    ReplyDelete