சிறு வயதில் இந்தி மீது ஏனோ ஒரு வெறுப்பு . நான் கண்ட முதல் மெகா
சீரியல் ராமாயணம் தான் .தூர தர்சனில் அப்போது இந்தி தெரியாமல் ஊமை
படம் பார்ப்பது போல் ஓர் உணர்வு ஏற்ப்படும் .தமிழ் ஒலிபரப்பு நேரம் மிக
குறைவு . ஞாயிறு ஒரு நாள் தமிழ் படம் பார்ப்பது அப்படி ஒரு சந்தோஷம்
.அதன் பிறகு அம்மாவிடம் அடி வாங்கி அழுவது ஒரு தொடர்கதைதான் .
என்றோ ஒருநாள் கேரளா செல்ல கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷன் போகும்போது தார் மூலம் அழிக்கப்பட்ட சில இந்தி எழுத்துக்களை காண நேரிடும் அப்போதுகூட இந்தி படிக்க கூடாத ஒரு பாஷை என்று நினைத்துக் கொள்வேன் . எங்கவூர் அஞ்சலகத்திலும் ,ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இந்தி எழுத்துக்களை கண்டு எனக்குள் கோபம் கொண்டுள்ளேன் .
பல சமயங்களில் ஆழ்துளை கிணறு அமைக்க வட இந்தியர்கள் எங்கள் கிராமத்திற்கு வருவதுண்டு , அவர்கள் பேசுவதை கண்டு வெறுப்புடன் நிற்ப்பேன் ஆனால் அவர்களது வேலைகளை வேடிக்கை பார்ப்பதுண்டு .அவர்கள் பேசியது தெலுங்கோ ,கன்னடமோ இருக்கும் .நான் நினைத்தது அவர்கள் இந்திக்காரர்கள் என்று தான் .
என் தந்தையின் குரு சண்முகம் டைலர் கடையில் எப்போதும் இந்தி பாட்டு போடுவார்கள் .ஒரு மாறுதலுக்காக .ஆனால் சண்முகம் டைலர் அவர்கள் திராவிட பற்று மிக்க திமுக முக்கிய புள்ளி .பக்கத்துக்கு கடை அய்யர் ஹோட்டல் ரவி இதுபோல் இந்தி பாடல் களை போடுவார் . இவர்கள் யாவருக்கும் இந்தி தெரியுமோ ? என்று நான் ஆராய்ச்சி செய்யவில்லை .
ஒருநாள் O N G C ஆட்கள் பெட்ரோல் ஆராய்சிக்காக அடுத்த கிராமத்திற்கு வந்திருந்தனர் .நான் நண்பர்களுடன் வழக்கம்போல் வேடிக்கை பார்க்க சென்றேன் .அவர்கள் ஆழ் துளை கிணறு வெட்டிக் கொண்டிருன்தனர் . வேலை முடிந்ததும் ரேடியோவில் இந்திபாட்டுக்கு அவர்கள் கவலை மறந்து டான்ஸ் ஆடிக்கொண்டிருப்பார்கள் அதையும் வேடிக்கை பார்த்துவிட்டு தான் வீடு திரும்புவேன் .
ஏனோ அன்று முதல் எனக்கும் இந்தி பாட்டின் இசை பிடித்துவிட்டது .இந்தி மீது இருந்த வெறுப்பு முற்றிலும் மாறிவிட்டது .ஒரு மொழியை கற்றால் அதனால் நன்மை மட்டுமே என்பதை அறிந்தேன் .
கும்பகோணம் கல்லூரியில் சேர்ந்தபோது தமிழ் பற்று காரணமாக B A தமிழ் இலக்கியம் தேர்ந்தெடுத்தேன் . அங்கு இந்தி சிறப்பு வகுப்பு இருப்பதை அறிந்து அதற்க்கு விண்ணப்பித்தேன் .மிக விரைவில் எனது விருப்பம் நிராகரிக்கப்பட்டது . காரணம் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு மாணவன் போலும் இல்லாததால் ஹிந்தி பண்டிட் பனி மாற்றல் கோரி விண்ணப்பித்திருந்தார் ,அவர் விண்ணப்பம் ஏற்க்கப்பட்டதே காரணம் .

ஆம் மொழியை கற்றால் எப்போதுமே உதவிதான்... எனக்கு எப்போது ஹிந்தி மேல் வெறுப்பெல்லாம் இல்லை. கட்டாயம் படிக்க வேண்டும் என்று சொல்லும் போது அந்தத்தன்மையை வெறுக்கிறேன்.
ReplyDeleteEnnakum apadithan
ReplyDeleteEnnakum apadithan
ReplyDelete