Monday, December 10, 2012

எல்லாம் ஒரு டைம் தான் !

மீப காலமாக ராமநாதனிடம்  யாரும் டைம் என்ன?  என்று கேட்பதில்லை.காரணம்  எப்போது  யார்  டைம்  கேட்டாலும் தவறான  நேரத்தை தான்  கூறுவான் .இது  அவன் குற்றமல்ல ராமநாதனுக்கும்  கைக்கடிகாரத் திற்கும்  உள்ள ராசி அப்படி . பல கைக் கடிகாரங்களை மாற்றிய பிறகும்  இதே நிலை .நண்பர்களின்  கிண்டல்  இது தான் "அவன்  டைம்  சரியில்லப்பா ! "
அந்த  பள்ளிக்கூடத்தில்  முதன் முதலாக ஒரு மாணவன்  கையில்  கைக்கடிகாரம்   இருந்தது  என்றால் ,அது எட்டாம்  வகுப்பு  படிக்கும்  ராமநாதன்  கையில்  கட்டியிருந்தது தான் . அந்த முதல்  எலக்ட்ரோனிக்  கடிகாரம்
ஒரு மணி நேரத்திற்கு  8 நிமிடங்கள்   குறைவாக ஓடியது . உணவு  இடைவேளை  ,வகுப்பு முடியும்  நேரம்  இவை  அனைத்தும்  ராமநாதன்  கடிகாரம்  மூலமாக  தெரிந்து கொள்வோம் .
மற்ற வகுப்பு மாணவர்களுக்கு  நேரம் தெரிந்து கொள்வது சிரமமாக  இருந்தபோதும்   வகுப்பில் சூரிய ஒளியின் வெயில்   வட்டம் மூலம்  உணவு  இடைவேளை  யை  தெரிந்து வைத்திருந்தனர் .
          சில ஆண்டுகள் முடிந்து   ஒருநாள் ராமநாதனை  பார்த்தேன் .திருப்பூரில்  பனியன் கம்பனியில  வேலைக்கு போவதாக கூறினான் .கையில்  ஒரு புதிய  கோல்ட் வாட்ச்  கட்டியிருந்தான் . நேரம்  சரியாக  காண்பிக்கிறதா ?  என்று கேட்டேன் . இது  ஆட்டோமாடிக்  வாட்ச்  வாரத்துக்கு  10 நிமிடம்  கூடவோ  குறையவோ  செய்யும்  என்றான் .
+2 படித்து  முடித்த  நேரத்தில்  ராமநாதன்   சில பெண்களின்  வழியில்  பின் தொடர்வதுண்டு  பிறகு சொல்லுவான் , " காதல் எல்லோருக்கும் வந்துடாது டா " என்று .   இப்போ  திடீரென்று   கம்பெனியில கூட வேலை பார்க்கும்  ஒரு பெண்ணை காதலிப்பதை  சொன்னான் .

அதிசயமாக  ராமநாதனின் காதலை  எவரும்  எதிர்க்கவில்லை .அதில் எனக்கொரு கவலையுமில்லை .ஒரு சுபதினத்தில் ஒரு நல்ல நேரத்தில் ராமநாதன் திருமணம்  நடந்தேறியது .நண்பர்கள் சேர்ந்து ஒரு நல்ல  TITAN   கை கடிகாரம் பரிசளித்தார்கள் .
ஒவ்வொரு  காதலும் இவ்வாறு  வெற்றி யடைந்தால்  எப்படியிருக்கும் .நண்பர் வீரபாண்டியன் அவரது காதலுக்கு மற்ற சில நண்பர்கள் எதிர்த்தார்கள் கடைசியில் வெற்றி யடைந்தார் .நான்  கண்ட  காதலர்களில்  பலரது காதல் வெற்றி  யடைந்து உள்ளது .பலரது ஒருதலைக் காதல்  பரிதாபமானது .
ராமநாதன் திருமணம் முடிந்து சரியாக ஒரு ஆண்டு நெருங்கும் வேளை .அன்று அதிகாலை  ராமநாதன் வெறும் சடலமாக தான் கிடந்தான் .கடந்த ஒரு மாதமாக மனைவி யுடன் தினமும்  சண்டை .கடைசி யில் தற்கொலை செய்துகொண்டான் .இப்போதும்  அவன்  கையில்   அதே  கடிகாரம்   நேரம் சரியாக  10 மணி காண்பித்தது .அந்த நேரம் எல்லோருடைய  கடிகாரத்திலும்   10 மணி தான் .!!

Tuesday, November 27, 2012

திருட்டு ஆப்பிள்

நான் ஓமன்  நாட்டில்  மசிராஹ் வில் இருந்தபோது ஒரு பிரபலமான   மீன் கம்பெனியில்  வேலை பார்த்து வந்தேன் .அந்த நாட்களில்   பாலைவன  தேசத்தில்  ஒரு  வசந்த  கால அனுபவம் ஏற்பட்டது அதுதான்  முதலாளி யின்  மகள் திருமணம் . திருமணத்தை  முன்னிட்டு  முதலாளி யின் குடும்பம்  கோலாகல  கொண்டாட்டத்திற்கு தயாரானது .
அந்த  கிராமத்தின்  அணைத்து  மக்களும்  கொடுப்பதற்காக  டன் கணக்கில் பழங்களும் ,அல்வா  முதலான  பலகாரக வகைகள் கொண்டு  வந்து இறக்கினர் .இவற்றை  வைப்பதற்காக  எங்கள்  குடியிருப்பின்  கடைசி வீட்டை  தேர்ந்தெடுத்து இருந்தனர் .அந்த வீட்டில்  யாரும் குடியிருக்க வில்லை ,காரணம்  A /C  வசதி  இல்லாமல் இருந்தது .
நாங்கள்  பதினைந்து பேரும்  சேர்த்து தான்  இவற்றை  இறக்கினோம் ,ஆனால் எங்களுக்கு  ஒரு பழம்  கூட அந்த நிமிடம் வரை கிடைக்கவில்லை .ஒரு கூடை  ஆப்பிள்  அரபிக்கார டிரைவர்க்கு  தெரியாமல்  மாற்றி வைக்க  சமையல்காரன்  செய்த முயற்சி  தோல்வியில்  முடிந்தது .புத்திக்கு  எட்டியது  கைக்கு எட்டவில்லை .
ஆனாலும்  இவ்வளவு  தின்பண்டம்   கண்டு விட்டு ,உண்ணமுடியாமையால்  எனக்கு உறக்கமே  இல்லை .என் வாழ்வில்  இவ்வளவு  பழங்களை  நேரில் காண்பது  இதுவே முதல் முறை என்ற உண்மையை இங்கு வெளிப்படுத்துவதில் எனக்கு  வெட்கம் இல்லை .இரவு 11 மணி ,அனைவரும்  உறங்கியிருப்பர்கள் என்று  நானே  நினைத்துக்கொண்டேன் .எனது  அறையிலிருந்து  வெளியே வந்து  பழங்கள் இருந்த  அறையை  நோட்டம் விட்டேன் .எனது அறைக்கு  அடுத்த அறையாக  இருந்ததை  இப்போது  நினைத்து  பெருமை பட்டுக்கொண்டேன் . அந்த  அறையை  நோக்கி மெல்ல நடந்தேன் .அறையின் வலது புறத்தில்  விண்டோ  ஏசி  இருந்த அடையாளம்  மட்டுமே  உள்ள  துவாரத்தை  கண்டேன் . அதன் வழியாக தாவிக்குதித்தேன் . எனக்கு  மிகவும்  விருப்பமான  பச்சை  ஆப்பிள் கூடை  ஒன்றை  தூக்கி  ஏசி துவாரத்தில்  வைத்தேன் .பின்னர்  நானும் அதன்வழியாக  வெளியேறினேன் .அப்போது முதுகில்  ஒரு கீறல்  துவாரத்தின்  மேல் பக்கம் இருந்த  ஒரு ஆணிதான்  காரணம் .
மறுநாள்  சில ஆப்பிள்களை  நான் சாப்பிட்டுவிட்டு   பக்கத்துக்கு  அறை  நண்பர்களுக்கு  10 ஆப்பிள்களை  கொடுக்க சென்றேன் . அவர்களது  கட்டிலின் கீழ்  ஆரஞ்சு  கூடை இருப்பதைக் கண்டேன் .மற்றொரு அறையில்  இதுபோல்  சென்றபோது  அல்வா  இருப்பதைக்கண்டேன் . மனதில் ஒரு சந்தோஷம்  ,திருடியது நான் மட்டுமல்ல .எனக்குப் பிறகும் சிலர் .ஆக  எல்லா பதார்த்தங்களும்  எங்களுள்  பண்ட மாற்று முறை ஆனது .திடீரென்று  நினைத்துப் பார்த்தேன்  மற்றவர்  முதுகை  தொட்டுப்பார்க்க  வில்லையே.. ! .

Wednesday, November 21, 2012

அந்த இனிய நாட்கள்

நமது  வாழ்வில்  ஒரு  கவலையும்  இல்லாத  அந்த  பள்ளிப்பருவம் எவ்வளவு  இனிமையானது  என்பதை இப்போது தான்  உணர முடிகிறது .அடுத்த வேளை  உணவு  முதல்  அணைத்து  தேவை களுக்கும்  ஒரு கவலையும்  கொள்ளத் தேவை இல்லை .ஆனால்  அன்றைய  நாளில்  எதோ  ஒரு காரணம்   நாம்  வளரவேண்டும்  என்று  மட்டும்  மனதில்  ஏக்க மாக இருக்கும். இக்கவலை  எனக்கு  மட்டும் தானா ? என்று சில சமயம்  யோசித்து  பார்ப்பேன் .
5 ஆம் வகுப்பு  படித்த போது  வேளாங்கண்ணி  இன்ப சுற்றுலா சென்றது  இப்போதும்  நினைவில்  உள்ளது. நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆசை ,உப்பு  காய்ச்சுவது தான் அது .பலர் சொல்லக்கேட்டுள்ளேன் கடல் நீரிலிருந்து  உப்பு  காய்ச்சு வதைப்பற்றி .எனவே  வேளாங்கண்ணி சுற்றுலா  சென்ற பொது  யாருக்கும் தெரியாமல் கடல் நீரை  ஒரு பாட்டிலில் எடுத்து வந்து  உப்பு தயாரித்து பார்த்தேன் .அதை இப்போது  நினைத்துப் பார்கையில்  நகைப்பிற் குரிய தாக இருக்கிறது .
இதுபோல் பல நினைவுகள்  இருந்தாலும்  ஒரு  நிகழ்வை மட்டும் இங்கே  தெரிவிக்கிறேன் .எங்கள்  வீட்டில் கோவைக்காய் கொடி  வளர்ந்து இருந்தது .கோவை இலையை பறித்து கட்டு கட்டி  பள்ளியில்   விற்பனை செய்வேன் ,ஒரு சிலேட் குச்சிக்கு  ஒரு  கட்டு  கோவை இலை  என்று . காரணம்  கோவை இலையை கொண்டுதான்  சிலேட்டில்  உள்ள  எழுத்துக்களை  அழிக்க  பயன்படுத்துவோம் .
ஒருநாள்  அவ்வாறு  கோவை இலையை  விற்கும்போது  கலிய மூர்த்திக்கும்   எனக்கும் சண்டை வந்து விட்டது . அவன் என்னை  கடித்து விட்டான் .பிறகு  நான் அழுது கொண்டே  வீட்டிற்கு  வந்தேன் .
      மறுநாள்  என் தந்தை  கலியமூர்த்தியின் தந்தையிடம்  புகார்  செய்தார்   கீழ் கண்டவாறு
     " உன் பையன்  கலிய மூர்த்தி  என் பையன  கடிச்சு புட்டன்யா "  என்று .அதற்க்கு  கலிய மூர்த்தியின் தந்தையோ  " என்னப்பண்றது யா ? சின்னப்புள்ளைங்க தானே   நாய் கடித்தால்  திருப்பியா ? கடிப்போம் !  அந்தமாதிரி  நினைச்சுக்கோ '  என்று .
அதற்க்கு எனது  தந்தையின்   மறுமொழி  இவ்வாறு  இருந்தது " சரி சரி  என் புள்ளைக்கு  தொப்புள  சுத்தி   ஊசி  போட்டுக்கறேன் "!!

Monday, November 5, 2012

இது ஒரு ஹிந்தி கதை

சிறு வயதில்   இந்தி  மீது  ஏனோ  ஒரு வெறுப்பு . நான் கண்ட முதல்  மெகா சீரியல்  ராமாயணம் தான் .தூர தர்சனில்   அப்போது  இந்தி தெரியாமல்   ஊமை படம்  பார்ப்பது போல்   ஓர் உணர்வு  ஏற்ப்படும் .தமிழ்  ஒலிபரப்பு  நேரம் மிக குறைவு . ஞாயிறு  ஒரு நாள் தமிழ் படம்   பார்ப்பது  அப்படி ஒரு  சந்தோஷம்  .அதன் பிறகு  அம்மாவிடம்  அடி வாங்கி  அழுவது  ஒரு தொடர்கதைதான் .
 என்றோ  ஒருநாள்  கேரளா  செல்ல  கும்பகோணம்   ரயில்வே ஸ்டேஷன்  போகும்போது  தார் மூலம்  அழிக்கப்பட்ட  சில இந்தி  எழுத்துக்களை  காண நேரிடும்  அப்போதுகூட  இந்தி  படிக்க கூடாத  ஒரு பாஷை என்று நினைத்துக் கொள்வேன் . எங்கவூர்  அஞ்சலகத்திலும்   ,ஆரம்ப சுகாதார நிலையத்திலும்  இந்தி எழுத்துக்களை கண்டு  எனக்குள்  கோபம் கொண்டுள்ளேன் .
          பல  சமயங்களில்  ஆழ்துளை  கிணறு  அமைக்க  வட  இந்தியர்கள்  எங்கள் கிராமத்திற்கு  வருவதுண்டு , அவர்கள்  பேசுவதை கண்டு  வெறுப்புடன்  நிற்ப்பேன்  ஆனால்  அவர்களது  வேலைகளை  வேடிக்கை   பார்ப்பதுண்டு .அவர்கள் பேசியது  தெலுங்கோ  ,கன்னடமோ   இருக்கும் .நான்  நினைத்தது  அவர்கள் இந்திக்காரர்கள் என்று தான் .
 என் தந்தையின்  குரு  சண்முகம் டைலர்  கடையில்  எப்போதும்  இந்தி பாட்டு போடுவார்கள் .ஒரு மாறுதலுக்காக .ஆனால்  சண்முகம்  டைலர்  அவர்கள்  திராவிட  பற்று மிக்க  திமுக  முக்கிய  புள்ளி .பக்கத்துக்கு கடை  அய்யர்  ஹோட்டல்  ரவி  இதுபோல்  இந்தி பாடல் களை  போடுவார் . இவர்கள்  யாவருக்கும் இந்தி தெரியுமோ ? என்று  நான்  ஆராய்ச்சி செய்யவில்லை .

ஒருநாள்  O N G C  ஆட்கள்   பெட்ரோல்  ஆராய்சிக்காக   அடுத்த  கிராமத்திற்கு  வந்திருந்தனர் .நான் நண்பர்களுடன்  வழக்கம்போல்  வேடிக்கை பார்க்க சென்றேன் .அவர்கள்  ஆழ்  துளை  கிணறு  வெட்டிக் கொண்டிருன்தனர் . வேலை முடிந்ததும்  ரேடியோவில்  இந்திபாட்டுக்கு  அவர்கள்  கவலை மறந்து  டான்ஸ் ஆடிக்கொண்டிருப்பார்கள்   அதையும்  வேடிக்கை பார்த்துவிட்டு  தான் வீடு திரும்புவேன் .
ஏனோ  அன்று முதல்  எனக்கும்  இந்தி பாட்டின்  இசை  பிடித்துவிட்டது .இந்தி மீது இருந்த  வெறுப்பு  முற்றிலும் மாறிவிட்டது .ஒரு மொழியை  கற்றால் அதனால்  நன்மை மட்டுமே என்பதை  அறிந்தேன் .

                                  கும்பகோணம்  கல்லூரியில் சேர்ந்தபோது தமிழ் பற்று       காரணமாக       B A   தமிழ் இலக்கியம்  தேர்ந்தெடுத்தேன் . அங்கு இந்தி  சிறப்பு வகுப்பு இருப்பதை அறிந்து  அதற்க்கு  விண்ணப்பித்தேன் .மிக விரைவில்  எனது விருப்பம்  நிராகரிக்கப்பட்டது . காரணம்  கடந்த மூன்று  ஆண்டுகளாக  ஒரு மாணவன் போலும்  இல்லாததால்  ஹிந்தி  பண்டிட்  பனி மாற்றல் கோரி  விண்ணப்பித்திருந்தார் ,அவர்  விண்ணப்பம்  ஏற்க்கப்பட்டதே  காரணம் .

Monday, October 22, 2012

ஒஷணிக்- 5

அந்த நாள் அக்டோபர் 22  ,2006 நான் முதன் முதலாக ஷம்கியா  என்ற  கப்பலில் பயணம் செய்த நாள் .நீங்கள் நினைப்பது போல் சொகுசு கப்பல் அல்ல ,இது சிறியவகை  கப்பல் .கார் முதலான வாகனங்களை இக்கரையில் இருந்து அக்கரையில் கொண்டு சேர்ப்பது . கப்பலில் முதன் முதலாக  செல்லும்  போது   யாராக  இருந்தாலும்  அவர்களுக்கு  தலைசுற்றல்  வாந்தி  ஏற்ப்படுவது இயல்பு ஆனால் ,எனக்கு  அவ்வாறு இல்லை .உற்சாகமாக இருந்தேன்  என்னுடன்  பணியில்  இருந்த  செல்லையா   இப்போதும்  வாந்தி  எடுப்பதாக  நண்பர்கள் சொல்கிறார்கள் .
           கடல் பயணம்  உற்சாகமாக  இருந்தபோதும்  ஒரு பயம் . நாம் திரும்பி வரவேண்டுமே ? என்னைக்காண  நண்பனோ ? தாயோ ? உடன் பிறப்புகளோ ? காத்திருப்பார்களே !. நான் இருப்பது அரபு தேசம் ஆனாலும்  இந்தியாவில்   எனக்காக  காத்திருக்க தானே செய்வார்கள் . எல்லா  தெய்வங்களையும்  நினைத்துக்கொண்டு  செல்வதுண்டு .ஒருநாள்  மட்டும்  அல்லவே  எனக்கு வேலை  கப்பலில்தான் .
தினமும்  அதிகாலை  மசிராஹ்   தீவில் இருந்து  சன்னாஹ்  தீப கற்பத்திற்கு  செல்ல வேண்டும்  .பயணம்  2 மணிநேரம் தான்  .40  மைல்  தொலைவு .சிலதினங்கள்  இரு முறை செல்ல வேண்டிவரும் .
அவ்வாறு செல்லும்போது  சில சமயம் கொடுங்காற்று   அடிக்கும் .கப்பல் தள்ளாடும் .எனக்கு   M G R  பாட்டு  மனதில் உதிக்கும்  "தரை மேல் பிறக்கவைத்தான்  ' என்ற பாடலை  முணுமுணுப்பதுண்டு . ஒருநாள்  நடு  கடலில்  சென்று கொண்டிருந்த பொது  கடுமையான  மழை  சூறைக் காற்று ,கடல் சீற்றம் . எனக்கு சீனியரான  பல  தொழிலாளிகள் கூட  பயந்து போய்விட்டார்கள் .பாபா என்ற  பாகிஸ்தானி  அழுதுவிட்டன்  ," எனக்கு நீச்சல் தெரியாது '  என்று கூறி . எனக்குமட்டும்  தெரியுமாக்கும்  என்று மனதிற்குள்  புலம்பினேன் .
சென்ற  வாரம் தான்  ஊரில் உள்ள நண்பன் முத்தப்பா விற்கு போன் போட்டு சொன்னேன் .நண்பா  எனக்கு  கப்பலில் வேலை கிடைச்சிருக்குன்னு .அவனோ  ' உன் சாவு  கடலில்தான்னு  எழுதி இருந்தா  யாரால தடுக்க முடியும்?"  அப்படி  சொல்லிப்புட்டான் . அதுமட்டுமா ? கப்பல் இடையில் நின்றால்  இறங்கி  தள்ளனுமே  என்று  கவுண்டமணி  திரைப்படத்தில் கூறியதை  எடுத்துவிட்டான் .ஒரு வழியாக  கரை சேர்ந்தோம் .

                      எங்களுக்கு  உணவு ,உறக்கம்  எல்லாம்  கப்பலில் தான் .ஓய்வு  நேரத்தில்   அங்கு இருந்தபடியே  மீன் பிடிப்பேன் .நான் எப்போது தூண்டில் போட்டாலும்  மீன் கிடைக்கும் .அது என் ராசிதான் . பிறகென்ன   பலுசிஸ்தானி   ரமீஸ்   நன்றாக  குழம்பு  வைப்பான் .நான் நன்றாக  சாப்பிடுவேன் . பாகிஸ்தான்  காரன்தான்  ஆனாலும்  சும்மா சொல்லக் கூடாது  கைப்பக்குவத்தை .
அன்றைய தினம்  கொரியன் மீன் பிடிக்  கப்பல் ஒஷணிக்- 5  நடுக்கடலில்  எங்களுக்காக  காத்திருந்தது .எங்கள் கப்பலில் டீஸல்  டாங்கில்  டீசல்  நிரப்பி  அவர்களுக்கு  விற்பதற்காக  செல்ல விருந்தோம் .வானம்  கருத்திருந்தது .ஒரு சில வெள்ளைக் காகங்கள்  வட்டமடித்து  சென்றது .பிஸ்கட்  , பச்சை ஆப்பிள் ,பெப்சி  ஒன்றும்  ஸ்டாக்  இல்லை .காரணம் கரையில் நேற்று  வாங்கவேண்டிய  பொருட்கள்  ஒன்றும்  வாங்கவில்லை ,கேப்டன்  உம்மர்  கொடுத்த  பியரை   குடித்ததுதான் கடை வீதி  செல்ல முடியாமல் போனது  .பாக்கெட்டை  தொட்டுப்பார்த்தேன்  9 சிகரட்  மீதம் இருந்தது. புறப்பட்டோம்
           சரியாக  2 மணி நேரத்தில்  நடுக்கடலில்  ஒஷணிக்- 5 ஐ  அடைந்தோம் .எங்கள் கப்பலில் இருந்து கயிற்றை   ஒஷணிக்- 5 ஐ நோக்கி  வீசினோம்  அவர்கள்  அதை  கைப்பற்றி  அவர்கள் கப்பலில்  நன்றாக  கட்டினர் .அதுபோல்  அவர்களது  கயிறை   எங்கள்  கப்பலில் கட்டி  இணைத்தோம்  இவ்வாறு  செய்வது தான்  மரபு .  டீசல்   அடிக்க  தொடங்கினோம்  மழையும்  தொடங்கியது .இப்போது  அடிக்கும்  காற்றை  விவரிக்க  இயலாது . சூரைக் காற்றோ?  சுழல்  காற்றோ ? ராமேஸ்வரம்  மீனவர்களுக்கே  வெளிச்சம் .

 பாபா  நடுங்கி விட்டான்  வழக்கம் போல .என்னிடம் இருந்த  சிகரட்  எல்லாம்  முடிந்து விட்டது .கொரியாக் காரன்  12 பெப்சியும்  5 கிலோ  நெய்மீனும்  தந்தான் அன்பளிப்பாக?. டீசல்  அடித்து  முடிந்தது கரைக்கு திரும்பும் போது   கேப்டன்  உம்மர்  சொன்னார்  " போன மாசம்  இந்த கொரியா  கப்பலில்  ஒரு  மர்டர்   நடந்துச்சு"    " கொலை செய்து   பிரீசர்ல  பாடிய போட்டுருக்கான் "  கேஸ்  நடப்பதாக  கூறினார் .நான்  வெல வெலத்து போனேன் .  பாவம்  அவனுக்கு  யார் யார்  காத்திருப்பார் களோ ?

Thursday, October 18, 2012

தூங்கப்போறேன் !

நான் பகரின்  சென்றபின்  முதல்  இருமாதங்கள்  எனக்கு  வேலை  கிடைக்க வில்லை .Free  விசா  எனப்படும்  முறையில்  சென்றதால்  எங்கு வேண்டுமானாலும்  வேலை தேடலாம் .ஒருநாள்  அவ்வாறு  வேலை தேடித் தேடி  அலைந்த களைப்பில்  சிறிது நேரம்  தூங்கலாம்  என்று எனது அறைக்கு வந்தேன் . நீண்டநாட்களாக  வேலை  தேடி அலைந்த நான்  எனது அறையில்  சட்டை மாட்டுவதற்கு  ஒரு ஆணி அடித்தேன் .அதற்க்கு கூட நேரமில்லாமல்  வேலை தேடி அலைந்துள்ளேன் .
ஆணி அடிக்கும்  சப்தம் கேட்டு  பக்கத்து  அறை  மலையாளி  நண்பர்கள்  எனது அறைக்கதவை  தட்டினார்கள் .நான் நினைத்தேன்  நம்ம ஊருலதான்   வாடகை வீட்டு சுவரில்  ஆணி அடிச்சா  வீட்டுக்காரர் பிரச்சனையை  கிளப்புவார்  இங்கேயுமா ? என்று நினைத்தேன்  ஆனாலும் நான் விடுவதாக இல்லை . இன்று  ஆணி அடித்தபின் தான்  கதவை  திறக்க வேண்டும்  என்று முடிவெடுத்தேன் .
      அவர்களும்  விடுவதாக இல்லை,தொடர்ந்து  கதவு தட்டப்பட்டது . ஒரு ஆள்  மட்டும்  சத்தமாக கேட்டார்    "உள்ளே என்ன செய்கிறாய் ?" என்று
நான் "  நான் தூங்கப்போறேன்  ஆணி அடிக்கிறேன்  என்று சொன்னேன். அவ்வளவுதான்   அனைவரும்  தூங்காதே !   தூங்காதே ! !  என்று  கூச்சலிட்டனர் . இதற்குள்  எனது  அண்ணனிடம்  தகவல்  சென்றது  அவரும் பதறி  அடித்துக்கொண்டு  வந்துவிட்டார் . சரியாக  அந்நேரம்  கதவை திறந்தேன் .
அனைவரும்  என்னை சூழ்ந்துகொண்டு  அறிவுரை  சொல்ல  ஆரம்பித்து விட்டார்கள்  இவ்வாறு    " தம்பி உனக்கு வேலை கண்டிப்பாக கிடைக்கும் " ,       " இதற்க்கெல்லாம்  சாகத் துணியலாமா ?"  என்று
      அடப்பாவிகளா !  நான் என்ன  தற்கொலைக்கா   முயற்சி பண்ணினேன் ?  என்று கேட்டேன் . பிறகுதான்  தெரிந்தது  தூங்கப்போறேன்  என்றால்  தூக்கு மாட்டிக்க  போறேன்  என்று  மலையாளத்தில்  பொருள் என்று .
        பிறகு  அவர்களிடம்  சொன்னேன்  இவ்வாறு    " சரி  சரி   இப்ப  சொல்றேன்   கொஞ்சநேரம்  நிம்மதியா  தூங்கப்போறேன் !"


Friday, October 12, 2012

கனவு

     
                                கனவு 
    அன்று டக்குத்தெரு  மாரியம்மன்  கோவிலில் இருந்து  பூசாரி  காளிமுத்து  வந்திருந்தார்  எனது வீட்டிற்கு .

அவர் வந்த காரியம் இதுதான் , பூசாரியின் கனவில்  மாரியம்மன்  தோன்றி  என்  அம்மா  ஒரு குடம்  பால்  கொண்டுவருவது போல்  கனவு  கண்டாராம் . அதுபோல்  செய்யவேண்டும்  என்று  அறிவுறுத்த  வந்ததாக  கூறினார் .எனக்கு  சிரிப்பு வந்தது  ஆனால்  அடக்கிக்கொண்டேன் . பெரியவர்கள்  பேசும்போது  குறுக்கே பேசக்கூடாது  என்று  அம்மா  முன்பு  கூறியிருக்கிறார் .
   பூசாரி  போன பிறகு  அம்மாவிடம்  சொன்னேன்  இது  மூட நம்பிக்கை ,அவ்வாறு  செய்யவேண்டாம்  என்று  ஆனால்  அம்மா  என் பேச்சை கேட்கவில்லை . அவ்வாறு  செய்யாவிடின்  மாரியம்மன்  பலி வாங்கிவிடும்  என்று  சொன்னார்கள் . இதையும் பூசாரிதான்  சொல்லியிருக்க  வேண்டும் .
         அதுவும்  பித்தளை  குடத்தில் தான்  பால் கொண்டுவரவேண்டும்  என்று  சொன்னதாக  அம்மா  என்னிடம்  கூறினார் .இந்த நேரத்தில்  அந்த பூசாரியின்  ஞாபக  சக்தியை  மெச்சினேன் ! காரணம்   அந்த  பால் குடம்  எவர்சில்வரா ?  பித்தளையா ? என்று கனவில் கூட அந்த பூசாரி கவனத்தில் கொண்டுள்ளார்  அதனால்  கும்பகோணம்   சென்று  ஒரு பித்தளை  குடம்  வாங்கினோம் .
மறுநாள்  மாரியம்மன் கோவிலுக்கு சென்று  அவர் கூறியபடி  பால் குடத்தை  ஒப்படைத்து ,மாரியம்மன்  ஆசையை (?)  நிறைவேற்றி  அருள் பெற்று வந்தோம்(?) ! !
   மனிதனின்  ஆசையை  அவரவர்  பேச்சில்  அறியலாம் . ஆனால்  இறைவனின் ? ஆசையை அறிவது கடினம்  ,இது போல  பூசாரிகளின்  மூலமாகத்தான்  தெய்வம்  தெரிவிக்கும்  என்று  என் அம்மா நம்பிவந்தார் .

       நாம் காணும்  கனவுகள்  மெய்ப்பட வேண்டும் என்று  எல்லோரும்  விரும்புவது  இயல்புதான். ஆனால்  நல்ல கனவுகள் மட்டும்  நடக்க வேண்டும் என்று  நினைப்பது  சுயநலம்  என்று நான் நினைக்கவில்லை .நான் ஒருநாள்  கண்ட கனவு  ஒரு பெரிய பயத்தை உண்டாக்கியது ,நான்  தேம்பித் தேம்பி  அழுகிறேன்,என்னை சுற்றி  என் உறவினர்  உடன்பிறப்புக்கள்  அனைவரும்  அழுகின்றனர் .இவ்வளவு ஏன் அங்கு  பிணமாக  கிடப்பது கூட  நான்தான் ,என்  சாவிற்கு  நான் அழுவது  கனவில் மட்டுமே நடக்க கூடியதுதான் .அதனால்  பயம் தெளிந்தது .
ஒருநாள்  எதோட்சையாக  மாரியம்மன்  கோவில் வழியாக சென்றபோது  கோவில் குளத்தில் பூசாரி  குளித்துக் கொண்டிருந்தார்  நாம் வழங்கிய  குடத்தைப் பயன்படுத்தி . இதை  அம்மாவிடம்  சொல்லவில்லை  ஆனால்  வேறொன்று சொன்னேன்   
    " நம்ம நேரம்   பூசாரி  பால் குடத்தை மட்டும் தான்  கனவு கண்டார் !  அல்லாமல்  கோவில்  கட்டுவதுபோல்   கனவு வரவில்லை !.