சமீப காலமாக ராமநாதனிடம் யாரும் டைம் என்ன? என்று கேட்பதில்லை.காரணம்
எப்போது யார் டைம் கேட்டாலும் தவறான நேரத்தை தான் கூறுவான் .இது
அவன் குற்றமல்ல ராமநாதனுக்கும் கைக்கடிகாரத் திற்கும் உள்ள ராசி
அப்படி . பல கைக் கடிகாரங்களை மாற்றிய பிறகும் இதே நிலை .நண்பர்களின்
கிண்டல் இது தான் "அவன் டைம் சரியில்லப்பா ! "
அந்த பள்ளிக்கூடத்தில் முதன் முதலாக ஒரு மாணவன் கையில் கைக்கடிகாரம் இருந்தது என்றால் ,அது எட்டாம் வகுப்பு படிக்கும் ராமநாதன் கையில் கட்டியிருந்தது தான் . அந்த முதல் எலக்ட்ரோனிக் கடிகாரம்
ஒரு மணி நேரத்திற்கு 8 நிமிடங்கள் குறைவாக ஓடியது . உணவு இடைவேளை ,வகுப்பு முடியும் நேரம் இவை அனைத்தும் ராமநாதன் கடிகாரம் மூலமாக தெரிந்து கொள்வோம் .
மற்ற வகுப்பு மாணவர்களுக்கு நேரம் தெரிந்து கொள்வது சிரமமாக இருந்தபோதும் வகுப்பில் சூரிய ஒளியின் வெயில் வட்டம் மூலம் உணவு இடைவேளை யை தெரிந்து வைத்திருந்தனர் .
சில ஆண்டுகள் முடிந்து ஒருநாள் ராமநாதனை பார்த்தேன் .திருப்பூரில் பனியன் கம்பனியில வேலைக்கு போவதாக கூறினான் .கையில் ஒரு புதிய கோல்ட் வாட்ச் கட்டியிருந்தான் . நேரம் சரியாக காண்பிக்கிறதா ? என்று கேட்டேன் . இது ஆட்டோமாடிக் வாட்ச் வாரத்துக்கு 10 நிமிடம் கூடவோ குறையவோ செய்யும் என்றான் .
+2 படித்து முடித்த நேரத்தில் ராமநாதன் சில பெண்களின் வழியில் பின் தொடர்வதுண்டு பிறகு சொல்லுவான் , " காதல் எல்லோருக்கும் வந்துடாது டா " என்று . இப்போ திடீரென்று கம்பெனியில கூட வேலை பார்க்கும் ஒரு பெண்ணை காதலிப்பதை சொன்னான் .
அதிசயமாக ராமநாதனின் காதலை எவரும் எதிர்க்கவில்லை .அதில் எனக்கொரு கவலையுமில்லை .ஒரு சுபதினத்தில் ஒரு நல்ல நேரத்தில் ராமநாதன் திருமணம் நடந்தேறியது .நண்பர்கள் சேர்ந்து ஒரு நல்ல TITAN கை கடிகாரம் பரிசளித்தார்கள் .
ஒவ்வொரு காதலும் இவ்வாறு வெற்றி யடைந்தால் எப்படியிருக்கும் .நண்பர் வீரபாண்டியன் அவரது காதலுக்கு மற்ற சில நண்பர்கள் எதிர்த்தார்கள் கடைசியில் வெற்றி யடைந்தார் .நான் கண்ட காதலர்களில் பலரது காதல் வெற்றி யடைந்து உள்ளது .பலரது ஒருதலைக் காதல் பரிதாபமானது .
ராமநாதன் திருமணம் முடிந்து சரியாக ஒரு ஆண்டு நெருங்கும் வேளை .அன்று அதிகாலை ராமநாதன் வெறும் சடலமாக தான் கிடந்தான் .கடந்த ஒரு மாதமாக மனைவி யுடன் தினமும் சண்டை .கடைசி யில் தற்கொலை செய்துகொண்டான் .இப்போதும் அவன் கையில் அதே கடிகாரம் நேரம் சரியாக 10 மணி காண்பித்தது .அந்த நேரம் எல்லோருடைய கடிகாரத்திலும் 10 மணி தான் .!!

ReplyDeleteநன்றாக இருந்தது சதீஷ் ... முடிவு தான் மனம் கனக்கச் செய்கிறது
நேரம் சரியானதும் அவருக்கு நேரம் முடிந்துவிட்டது போல....
ReplyDeleteதற்கொலைகள் உறவின் எல்லைகளை பயத்தோடே பார்க்க வைக்கிறது...
இன்னும் குடும்பத்தில் சகித்துக்கொண்டிருந்தால் யாருக்கும் இந்த முடிவு தேவைப்படாது....
அழ்ந்த அனுதாபங்கள்...