கல்லி வல்லி !
கல்லி வல்லி இந்த ஒரு வார்த்தை மட்டும் இல்லை
என்றால் மன ஆறுதல் இல்லை அரபு நாடுகளில் . எத்தனை இன்னல்கள்
ஏற்பட்டாலும் ஒரு நிம்மதி என்றால் அது கல்லி வல்லி . இதன் பொருள்
போனால் போகட்டும் என்ற அர்த்தத்தில் கூறப் படுகிறது .
ஒரு நண்பர்
சொன்னார் வெளிநாடு செல்வதானால் " வெட்கம் சூடு சொரணை இருக்க
கூடாது குறிப்பாக கோபம் கூடவே கூடாது " நான் தமாசு என்று
நினைத்தேன் , நான் பகரினில் கால் வைக்கும் நிமிஷம் வரை .
90
விழுக்காடு அடிமைகளாக வேலை செய்ய வேண்டியது தான் . அரபு நாடுகளில்
வேலைக்கு செல்லும் பலருக்கும் இது போல பல அவமானங்கள் நேர்வதுண்டு .
ஆனல் இங்குள்ளவர்க்கு அந்த வலி சொல்லி புரிய வைக்க முடியாது .
சிலர் மனைவியின் தாலியை அடகு வைத்து வந்தவர்களும் உண்டு . அது போல்
வருபவர்க்கு ஒரு துன்பம் என்றால் உடனே நம் நாட்டிற்கு வந்துவிடவும்
முடியாது . அப்படி வந்தால் கடனை எப்படி அடைப்பது என்று பயம்
வந்துவிடும் .
எனக்கு தைரியம் சொன்ன சில நண்பர்கள் சொல்வது கேட்டால் அதிர்ச்சியளிக்கும்
" நண்பா ! செத்தாலும் இங்கியே செத்துடுவேன் ஊருல போயி கேவலப்பட மாட்டேன் " என்று
இது வாவது பரவாஇல்லை சிலர் வீட்டில் " செத்தா அங்கேயே சாவு "
என்று சொன்னதாக கேள்விபட்டேன் . என்ன கொடூரம் , இவ்வளவு கஷ்ட
பட்டும் பணம் சேர்த்து பின் இந்தியா திரும்பும்போது நமது மண்ணில்
கால் வைக்கும் பொது யாருக்கும் தெரியாமல் தெரிந்தாலும் வெட்கப்பட
தேவை இல்லை சட்டென்று குனிந்து ஒரு முத்தம் நம் மண்ணில் பதிக்கும்
போது
கண்களில் நீர் தவிர்க்க இயலாதது . என்னை அறியாமல் முனுமுனுத்தேன்
" கல்லி வல்லி ! "
Hi Satheesh,
ReplyDeleteI read all your posts. Now a regular visitor of your blog. And became a fan for your simple and thoughtful writing.
Thanks for Sharing,
Dhayanithy
Thank you Daya
Delete