Thursday, July 5, 2012

குறுஞ்செய்தி

நல்லது கெட்டதுக்கு நாலு பேரு வேணும்  என்பார்கள் .எனக்கு குறைந்த அளவு  நண்பர்கள்  இருந்த போதும் ,நாலு பேர்  நெருக்கமான  நண்பர்கள்  இருந்தனர் .ஆனால் அவர்கள் இருக்கும் இடம்தான்  தொலைவு .
கேரளா  வந்து தங்கிவிட்டதால்  அவர்களும் இங்கு வருவதில்லை  நானும் கோவை செல்லும்போது  அவர்களை காண முடிவதில்லை . ஆனாலும் எனது  திருமனத்திற்கு அவர்களை  அழைத்தேன்
மின் அஞ்சலில்  அழைப்பிதல்  அனுப்பினேன் ,செல்பேசியில் குறுஞ்செய்தியும்  அனுப்பினேன் .
  தற்காலத்தில்  குறுஞ்செய்தி  மிக பயனுள்ளதாகவே  நான் உணருகிறேன். பழைய  நாட்களில்  நண்பர்களுக்கு கடிதங்கள் பல எழுதியதுண்டு .அது ஒரு சுகமான  அனுபவம் . இக்காலதவர்க்கு
அது கிடைக்க வாய்ப்பில்லை .
பல நாட்கள்  யாரிடமிருந்தோ வரும் கடிதத்திற்கு  காலைமுதல் தபால்காரரை  காத்திருந்து ,அவர் 
நம்மை  கடந்து போகும் வரை  கண்கள் அசைவற்று இருந்துள்ளேன் . சில சமயம் எங்காவது  சென்று  பின் வீடு திரும்பும்போது  கடிதம் எதாவது ? என்று  வினவுவேன் . தற்போது கூட  சிலசமயம் கடந்த காலத்தில் நண்பர்கள் அனுப்பிய  கடிதத்தை  மீண்டும்  எடுத்துப் படித்துப் பார்ப்பேன். குறுஞ்செய்தியில்  உடனுக்குடன்  தகவல் சென்று சேர்க்கிறது ,மற்றபடி  அன்பை அதிகமாக  பரிமாறிக்கொள்ள முடிவதில்லை .சில குறுஞ்செய்திகள்  பலருக்கு ஒரே சமயத்தில் அனுப்பப் படுகிறது .அதில் பல  கருத்துக்கள்  இருந்தாலும் , அதை முதலில் எழுதியது யார் ? என்பது  விடை  இல்லா கேள்வி .

       கடிதம் என்றவுடன்  மனது எங்கோ சென்று விட்டது .மீண்டும் நம்ம கதைக்கு வருகிறேன் .அந்த  நான்கு நண்பர்களுக்கு  மீண்டும்  ஒரு  நினைவூட்டல்  குறுஞ்செய்தியை இவ்வாறு அனுப்பினேன்
" அன்பு நண்பரே ! எனது  திருமணம்  வரும் 18 .01 .2009 .இது ஒரு நினைவூட்டல்  தங்கள் வருகைக்கு காத்திருக்கும் நண்பன் "
ஆனால் அந்த நால்வரும் வரவில்லை ஏதோ காரணத்தால் .நால்வருக்கும்  நாலு காரணங்கள் இருக்குமல்லவா .
ஆனாலும் திருமணம் முடிந்தபின்  என் நன்றி  குறுஞ்செய்தியை தவறாது  பின்வருமாறு   அனுப்பினேன்   "  எனது  திருமனத்திற்கு வந்து  வாழ்த்திய  அன்பு  நெஞ்சத்திற்கு எனது  மனமார்ந்த நன்றி " .

சிறுகுறிப்பு : ஒருவேளை  அவர்கள் வந்திருந்தால்  எனது குறுஞ்செய்தியின்  கடைசி  மூன்று  எழுத்துக்களை  மட்டுமே அனுப்பியிருப்பேன் .இந்த குறுஞ்செய்தியை கண்டு ஒரு நண்பர் மட்டும் செல்பேசியில் அழைத்து  இப்படி சொல்லி விட்டார்  " நண்பா  நாக்க புடுங்கறமாதிரி  மெசேஜ்  அனுப்பிட்ட  , இதுக்கு என்னை செருப்பால்  அடித்திருக்கலாம் " என்று .
நான் சொன்னேன்  "  மன்னிக்கவும்  நண்பா  ராங் கால் போன்று இது  ராங்  sms  திருமனத்திற்கு  வந்தவர்க்கு  அனுப்பியது   உங்க பேருக்கும்  ஆட்ஆயிடுச்சு ."
  

2 comments: