Saturday, July 28, 2012

தூ (து) க்கத்தில் நடந்தேன் !

தூ (து) க்கத்தில்  நடந்தேன் !
தூக்கத்துல  நடக்கின்ற  வியாதி பற்றி  கேள்விப்பட்டு  இருப்பீர்கள் .நானும்  தூக்கத்தில்  எழுந்து நடப்பதுண்டு .பத்து ஆண்டுகட்கு முன்  தினமும்  இரவில்  2 மணியளவில்  என் வீட்டு  முன் கதவு  திறந்து  வெளியில்  சென்று  உலாவிவிட்டு வருவேன் . இதை என் அம்மா  கண்டுபிடித்து  சொல்லித்தான்  எனக்குத் தெரியும் . அதுமட்டுமல்லாமல்  நான் தூக்கத்தில்   யார்  எது கேட்டாலும்  எடுத்து  கொடுத்துவிடுவேன் . இன்னார்தான்   இதை  என்னிடம் இருந்து  பெற்றார்கள்  என்ற  நினைவு  கூட  இருக்காது .
ஒருநாள்  அவ்வாறு  நான் தூக்க கலக்கத்தில்  இருந்தபோது , என்னிடம்  VCR  ஐ  பெற்றுக்கொண்டு  ஒரு நண்பர்  சென்று விட்டார் . ஆனால்  அவர்  யார் ?  என்று  தெரியவில்லை . நன்றாக  யோசித்துப் பார்த்தும்  நினைவுக்கு  வரவில்லை .சில நண்பர்களிடம் கேட்டுப் பார்த்தேன் ,அவர்கள்  வாங்கவில்லை என்று சொன்னார்கள் .அதுமட்டுமல்லாமல்  இதுபற்றி  யாரிடமும்  சொல்ல  வேண்டாம் என்றனர் . வாங்கியவர்  தானாகவே  தரும் வரை காத்திருக்க  சொன்னார்கள் .  காத்திருந்தேன் .
இருந்தாலும்  நான்   தூக்கத்தில்  நடப்பது  எனக்கு  ஒரு பயத்தை  உண்டாக்கியது . உறக்கம்  என்பது  இறைவன்  தந்த  வரமாகவே நான் கருதுகிறேன் . காரணம்  இன்றைய  காலகட்டத்தில்  எத்தனை பேர் தூக்கம்  இன்றி  தவிக்கின்றனர்  என்பது  கண் கூடாக  காணலாம் . ஒவ்வொருவர்க்கும்  ஒவ்வொரு  கவலை , சிலருக்கு  வியாதியின் காரணமாக  உறக்கமின்மை ,  சிலருக்கு  வயது  முதிர்வு  காரணமாக  உறக்கமின்மை ,சிலருக்கு  பயம்  காரணம் ,சிலருக்கு  பணம்  காரணம் .
      பல  சமயங்களில்   பகலில்  கூட  அருமையான  தூக்கம் வரும் ,தூங்கியிருக்கிறேன் .ஒவ்வொரு முறை  தூங்கி எழும்போது   ஒரு  சுகம் . 2003  இல்  கோயம்புத்தூர்  ஜிம்சன்   வாட்ச் கம்பனியில்  வேலை  பார்த்தபோது , நண்பர்  நிவாஸ் கான்   தினமும்  2 மணிக்கு பிறகு  நல்ல தூக்கம் போடுவார்  பணியில்?  இருக்கும் போது  தான் . நான்  சொல்வேன்  " தூங்குங்க!   நிவாஸ்  தூங்குங்க !  தூக்கம்  என்பது  இறைவன்  கொடுத்த வரம்"  என்று .
    அதைவிட   மஸ்கட்டில்  இருந்தபோது   கடின  உடல் உழைப்பு  , எப்போது  1 மணியாகும்  என்று  காத்திருப்பேன் ,1 மணிக்கு  சாப்பிட்டு முடித்து  சிறிது நேரம்  தூங்குவேன் . இரண்டு மணிக்கு  மீண்டும்  வேலை  தொடங்கும் .
ஆனால்  தற்போது  பகலில்  தூங்கும்  பழக்கம்  எனக்கு  அடியோடு  மாறிவிட்டது .ஏதாவது ஒரு ஞாயிறு  பகல்  தூங்கினால்  இரவில்  தூக்கம் வருவதில்லை .
    மீண்டும் VCR  மேட்டருக்கு  வருவோம் . அதுபோல்  ஒருநாள்  பகலில்  நல்ல தூக்கம்  4  மாதம் கழித்து  அந்த  நண்பர்   என்னை  எழுப்பினார் ,   VCR ஐ  திருப்பி  தந்துவிட்டு  சென்று விட்டார் .தூக்க கலக்கத்தில் மீண்டும்   தூங்கிவிட்டேன் .
நன்றாக  தூக்கம்  கலைந்தபின்   யோசித்துப் பார்த்தேன் . VCR  ஐ  திருப்பி தந்தது  யார் ?  இன்றுவரை   அது  புதிர் தான் !.

2 comments:

  1. Supper தூங்கு மூஞ்சு அப்படியா

    ReplyDelete
  2. Supper தூங்கு மூஞ்சு அப்படியா

    ReplyDelete