தூ (து) க்கத்தில் நடந்தேன் !
தூக்கத்துல நடக்கின்ற வியாதி பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் .நானும் தூக்கத்தில் எழுந்து நடப்பதுண்டு .பத்து ஆண்டுகட்கு முன் தினமும் இரவில் 2 மணியளவில் என் வீட்டு முன் கதவு திறந்து வெளியில் சென்று உலாவிவிட்டு வருவேன் . இதை என் அம்மா கண்டுபிடித்து சொல்லித்தான் எனக்குத் தெரியும் . அதுமட்டுமல்லாமல் நான் தூக்கத்தில் யார் எது கேட்டாலும் எடுத்து கொடுத்துவிடுவேன் . இன்னார்தான் இதை என்னிடம் இருந்து பெற்றார்கள் என்ற நினைவு கூட இருக்காது .
ஒருநாள் அவ்வாறு நான் தூக்க கலக்கத்தில் இருந்தபோது , என்னிடம் VCR ஐ பெற்றுக்கொண்டு ஒரு நண்பர் சென்று விட்டார் . ஆனால் அவர் யார் ? என்று தெரியவில்லை . நன்றாக யோசித்துப் பார்த்தும் நினைவுக்கு வரவில்லை .சில நண்பர்களிடம் கேட்டுப் பார்த்தேன் ,அவர்கள் வாங்கவில்லை என்று சொன்னார்கள் .அதுமட்டுமல்லாமல் இதுபற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றனர் . வாங்கியவர் தானாகவே தரும் வரை காத்திருக்க சொன்னார்கள் . காத்திருந்தேன் .
இருந்தாலும் நான் தூக்கத்தில் நடப்பது எனக்கு ஒரு பயத்தை உண்டாக்கியது . உறக்கம் என்பது இறைவன் தந்த வரமாகவே நான் கருதுகிறேன் . காரணம் இன்றைய காலகட்டத்தில் எத்தனை பேர் தூக்கம் இன்றி தவிக்கின்றனர் என்பது கண் கூடாக காணலாம் . ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு கவலை , சிலருக்கு வியாதியின் காரணமாக உறக்கமின்மை , சிலருக்கு வயது முதிர்வு காரணமாக உறக்கமின்மை ,சிலருக்கு பயம் காரணம் ,சிலருக்கு பணம் காரணம் .
பல சமயங்களில் பகலில் கூட அருமையான தூக்கம் வரும் ,தூங்கியிருக்கிறேன் .ஒவ்வொரு முறை தூங்கி எழும்போது ஒரு சுகம் . 2003 இல் கோயம்புத்தூர் ஜிம்சன் வாட்ச் கம்பனியில் வேலை பார்த்தபோது , நண்பர் நிவாஸ் கான் தினமும் 2 மணிக்கு பிறகு நல்ல தூக்கம் போடுவார் பணியில்? இருக்கும் போது தான் . நான் சொல்வேன் " தூங்குங்க! நிவாஸ் தூங்குங்க ! தூக்கம் என்பது இறைவன் கொடுத்த வரம்" என்று .
அதைவிட மஸ்கட்டில் இருந்தபோது கடின உடல் உழைப்பு , எப்போது 1 மணியாகும் என்று காத்திருப்பேன் ,1 மணிக்கு சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் தூங்குவேன் . இரண்டு மணிக்கு மீண்டும் வேலை தொடங்கும் .
ஆனால் தற்போது பகலில் தூங்கும் பழக்கம் எனக்கு அடியோடு மாறிவிட்டது .ஏதாவது ஒரு ஞாயிறு பகல் தூங்கினால் இரவில் தூக்கம் வருவதில்லை .
மீண்டும் VCR மேட்டருக்கு வருவோம் . அதுபோல் ஒருநாள் பகலில் நல்ல தூக்கம் 4 மாதம் கழித்து அந்த நண்பர் என்னை எழுப்பினார் , VCR ஐ திருப்பி தந்துவிட்டு சென்று விட்டார் .தூக்க கலக்கத்தில் மீண்டும் தூங்கிவிட்டேன் .
நன்றாக தூக்கம் கலைந்தபின் யோசித்துப் பார்த்தேன் . VCR ஐ திருப்பி தந்தது யார் ? இன்றுவரை அது புதிர் தான் !.

Supper தூங்கு மூஞ்சு அப்படியா
ReplyDeleteSupper தூங்கு மூஞ்சு அப்படியா
ReplyDelete