நான் ஓமன் நாட்டில் மசிராஹ் வில் இருந்தபோது ஒரு பிரபலமான மீன்
கம்பெனியில் வேலை பார்த்து வந்தேன் .அந்த நாட்களில் பாலைவன தேசத்தில்
ஒரு வசந்த கால அனுபவம் ஏற்பட்டது அதுதான் முதலாளி யின் மகள் திருமணம் .
திருமணத்தை முன்னிட்டு முதலாளி யின் குடும்பம் கோலாகல
கொண்டாட்டத்திற்கு தயாரானது .
அந்த கிராமத்தின் அணைத்து மக்களும் கொடுப்பதற்காக டன் கணக்கில் பழங்களும் ,அல்வா முதலான பலகாரக வகைகள் கொண்டு வந்து இறக்கினர் .இவற்றை வைப்பதற்காக எங்கள் குடியிருப்பின் கடைசி வீட்டை தேர்ந்தெடுத்து இருந்தனர் .அந்த வீட்டில் யாரும் குடியிருக்க வில்லை ,காரணம் A /C வசதி இல்லாமல் இருந்தது .
நாங்கள் பதினைந்து பேரும் சேர்த்து தான் இவற்றை இறக்கினோம் ,ஆனால் எங்களுக்கு ஒரு பழம் கூட அந்த நிமிடம் வரை கிடைக்கவில்லை .ஒரு கூடை ஆப்பிள் அரபிக்கார டிரைவர்க்கு தெரியாமல் மாற்றி வைக்க சமையல்காரன் செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது .புத்திக்கு எட்டியது கைக்கு எட்டவில்லை .
ஆனாலும் இவ்வளவு தின்பண்டம் கண்டு விட்டு ,உண்ணமுடியாமையால் எனக்கு உறக்கமே இல்லை .என் வாழ்வில் இவ்வளவு பழங்களை நேரில் காண்பது இதுவே முதல் முறை என்ற உண்மையை இங்கு வெளிப்படுத்துவதில் எனக்கு வெட்கம் இல்லை .இரவு 11 மணி ,அனைவரும் உறங்கியிருப்பர்கள் என்று நானே நினைத்துக்கொண்டேன் .எனது அறையிலிருந்து வெளியே வந்து பழங்கள் இருந்த அறையை நோட்டம் விட்டேன் .எனது அறைக்கு அடுத்த அறையாக இருந்ததை இப்போது நினைத்து பெருமை பட்டுக்கொண்டேன் . அந்த அறையை நோக்கி மெல்ல நடந்தேன் .அறையின் வலது புறத்தில் விண்டோ ஏசி இருந்த அடையாளம் மட்டுமே உள்ள துவாரத்தை கண்டேன் . அதன் வழியாக தாவிக்குதித்தேன் . எனக்கு மிகவும் விருப்பமான பச்சை ஆப்பிள் கூடை ஒன்றை தூக்கி ஏசி துவாரத்தில் வைத்தேன் .பின்னர் நானும் அதன்வழியாக வெளியேறினேன் .அப்போது முதுகில் ஒரு கீறல் துவாரத்தின் மேல் பக்கம் இருந்த ஒரு ஆணிதான் காரணம் .
மறுநாள் சில ஆப்பிள்களை நான் சாப்பிட்டுவிட்டு பக்கத்துக்கு அறை நண்பர்களுக்கு 10 ஆப்பிள்களை கொடுக்க சென்றேன் . அவர்களது கட்டிலின் கீழ் ஆரஞ்சு கூடை இருப்பதைக் கண்டேன் .மற்றொரு அறையில் இதுபோல் சென்றபோது அல்வா இருப்பதைக்கண்டேன் . மனதில் ஒரு சந்தோஷம் ,திருடியது நான் மட்டுமல்ல .எனக்குப் பிறகும் சிலர் .ஆக எல்லா பதார்த்தங்களும் எங்களுள் பண்ட மாற்று முறை ஆனது .திடீரென்று நினைத்துப் பார்த்தேன் மற்றவர் முதுகை தொட்டுப்பார்க்க வில்லையே.. ! .

SWEET MEMORY
ReplyDeletenice one
ReplyDeleteits super...
ReplyDeleteASHOK KUMAR
DUBAI
Nice
ReplyDelete