Sunday, March 31, 2013

புன்னகை அதிபர்



நான் கனடாவில்  இருந்தபோது  பல நாட்களாக  அங்கு செல்ல  வேண்டும் என்ற  ஆவலில் இருந்தேன் ஒரு நாள்   அந்த வாய்ப்பு  அமைந்ததால்   நானும்  ரவியும்  அங்கு சென்றோம் . அது ஒரு  விநோத மனோதத்துவ மையம் . உங்களுக்கு  மன ரீதியான  பாதிப்போ? ,யாரயாவது  பழி  வாங்கவேண்டும் என்ற  உணர்ச்சியோ?   ,மன அழுத்தமோஎது வாக  இருந்தாலும் நீங்களும் இங்கு வருவது  நல்லது

 
எனக்கு  மன அழுத்தம் ஒன்றும் இல்லை  ஜஸ்ட்  பார்வையிடவேண்டும்  என்று தீர்மானித்தேன் .ஆனால் ரவியோ  நீண்ட நாட்களாக ஒரு விஷயத்தை  சொல்லி வருகிறான் .அது  அவன் கனவு கன்னியான  மூன்றெழுத்து  முண்டக்கன்னி  இவள் நடிகை மட்டுமல்ல  முன்னாள் உலக அழகியும்  கூட .அவளுடன் ஒரு  மணிநேரம்  செலவிட வேண்டும் என்று .

 
நாங்கள்  சென்ற  போது  எங்களை அன்புடன்  வரவேற்ற  அந்த  புன்னகை அதிபர் உண்மையில் இந்த  மையத்தின்  உரிமையாளர்  என்பதை  அறிந்தோம் . வாரத்தில் இருமுறை மட்டுமே  அவர் வருவார் என்ற தகவலும் அங்கே பேசிக்கொண்டார்கள்  மற்றபடி  சிகிட்சை  மற்றும் செயல்முறை விளக்கம் கொடுப்பதற்கென்றே  ஒரு டீம் அங்கு
செயல்பட்டு வருகிறது .1 கிலோமீட்டர்  சுற்றளவில்  பூங்கா வுடன் கூடிய கட்டிடங்கள் .
ஒரு பணியாளர்  எங்களை  ஒவ்வொரு  அறையாக  காண்பித்து கொண்டு சென்றார்கள் .முதல் அறையில்  நாங்கள் கண்டது ,ஒரு மாணவன்  அவனது  ஆசிரியரை   துப்பாக்கியால் சுட்டு விட்டு  கதறி அழுகிறான்  அவனை  கட்டியணைத்து  ஆறுதல் சொல்கிறார்  ஒரு ஒருங்கிணைப்பாளர் " நீ சுட்டது  ஆசிரியரை போன்ற பொம்மையைத் தானே " என்று பிறகு  அவரது  அறிவுரை . உண்மையில் இந்த மாணவன் இதை போல செய்திருந்தால்  சம்பவிக்கும் விளைவுகளை  எடுத்துரைத்தார் .

நாங்கள் கண்ட அடுத்த அறை  காட்சி  மிகவும்  கொடூரமானது .ஒருவன்  தன்  மனைவியை போல்  செய்யப்பட்ட  பொம்மையை  கத்தியால்  மாறி  மாறி  குத்திக்கொண்டிருந்தான் ..
அடுத்ததாக  ரவியை  ஒரு அறைக்கு  அழைத்து சென்றார்கள் .அந்த  அறை  முழுவதும்  பல டிஜிட்டல்  பானரில்  ரவியின்  கனவு கன்னி  சிரிக்கிறாள் .மங்கலான  வெளிச்சத்தில்   சோபாவில்  இயல்பாக அமர்ந்து இருந்தாள் ,என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை  நளினமான ரோபோ விற்கு  நடிகையின்  மாஸ்க்  தான் இது என்றுஅவ்வளவு  தத்ரூபமாக இருந்தது .எப்படியோ ரவிக்கும் இது ஒருவகை மனநோய் தானே ,இன்றோடு மாறட்டும் இந்நோய் .

கடைசியாக  நாங்கள்  பார்வையிட்ட அறையில்  ஒரு பெண் தனது காதலை எதிர்த்த தந்தையின்  நெஞ்சில்  குறி பார்த்து  சுட்டுக்கொண்டிருந்தாள் .ஒரு கணம்  அதிர்ந்தோம் . அடஇது  நம்மை வரவேற்ற  புன்னகை  அதிபர்  ஆயிற்றே ! ?

No comments:

Post a Comment