Thursday, July 5, 2012

குறுஞ்செய்தி

நல்லது கெட்டதுக்கு நாலு பேரு வேணும்  என்பார்கள் .எனக்கு குறைந்த அளவு  நண்பர்கள்  இருந்த போதும் ,நாலு பேர்  நெருக்கமான  நண்பர்கள்  இருந்தனர் .ஆனால் அவர்கள் இருக்கும் இடம்தான்  தொலைவு .
கேரளா  வந்து தங்கிவிட்டதால்  அவர்களும் இங்கு வருவதில்லை  நானும் கோவை செல்லும்போது  அவர்களை காண முடிவதில்லை . ஆனாலும் எனது  திருமனத்திற்கு அவர்களை  அழைத்தேன்
மின் அஞ்சலில்  அழைப்பிதல்  அனுப்பினேன் ,செல்பேசியில் குறுஞ்செய்தியும்  அனுப்பினேன் .
  தற்காலத்தில்  குறுஞ்செய்தி  மிக பயனுள்ளதாகவே  நான் உணருகிறேன். பழைய  நாட்களில்  நண்பர்களுக்கு கடிதங்கள் பல எழுதியதுண்டு .அது ஒரு சுகமான  அனுபவம் . இக்காலதவர்க்கு
அது கிடைக்க வாய்ப்பில்லை .
பல நாட்கள்  யாரிடமிருந்தோ வரும் கடிதத்திற்கு  காலைமுதல் தபால்காரரை  காத்திருந்து ,அவர் 
நம்மை  கடந்து போகும் வரை  கண்கள் அசைவற்று இருந்துள்ளேன் . சில சமயம் எங்காவது  சென்று  பின் வீடு திரும்பும்போது  கடிதம் எதாவது ? என்று  வினவுவேன் . தற்போது கூட  சிலசமயம் கடந்த காலத்தில் நண்பர்கள் அனுப்பிய  கடிதத்தை  மீண்டும்  எடுத்துப் படித்துப் பார்ப்பேன். குறுஞ்செய்தியில்  உடனுக்குடன்  தகவல் சென்று சேர்க்கிறது ,மற்றபடி  அன்பை அதிகமாக  பரிமாறிக்கொள்ள முடிவதில்லை .சில குறுஞ்செய்திகள்  பலருக்கு ஒரே சமயத்தில் அனுப்பப் படுகிறது .அதில் பல  கருத்துக்கள்  இருந்தாலும் , அதை முதலில் எழுதியது யார் ? என்பது  விடை  இல்லா கேள்வி .

       கடிதம் என்றவுடன்  மனது எங்கோ சென்று விட்டது .மீண்டும் நம்ம கதைக்கு வருகிறேன் .அந்த  நான்கு நண்பர்களுக்கு  மீண்டும்  ஒரு  நினைவூட்டல்  குறுஞ்செய்தியை இவ்வாறு அனுப்பினேன்
" அன்பு நண்பரே ! எனது  திருமணம்  வரும் 18 .01 .2009 .இது ஒரு நினைவூட்டல்  தங்கள் வருகைக்கு காத்திருக்கும் நண்பன் "
ஆனால் அந்த நால்வரும் வரவில்லை ஏதோ காரணத்தால் .நால்வருக்கும்  நாலு காரணங்கள் இருக்குமல்லவா .
ஆனாலும் திருமணம் முடிந்தபின்  என் நன்றி  குறுஞ்செய்தியை தவறாது  பின்வருமாறு   அனுப்பினேன்   "  எனது  திருமனத்திற்கு வந்து  வாழ்த்திய  அன்பு  நெஞ்சத்திற்கு எனது  மனமார்ந்த நன்றி " .

சிறுகுறிப்பு : ஒருவேளை  அவர்கள் வந்திருந்தால்  எனது குறுஞ்செய்தியின்  கடைசி  மூன்று  எழுத்துக்களை  மட்டுமே அனுப்பியிருப்பேன் .இந்த குறுஞ்செய்தியை கண்டு ஒரு நண்பர் மட்டும் செல்பேசியில் அழைத்து  இப்படி சொல்லி விட்டார்  " நண்பா  நாக்க புடுங்கறமாதிரி  மெசேஜ்  அனுப்பிட்ட  , இதுக்கு என்னை செருப்பால்  அடித்திருக்கலாம் " என்று .
நான் சொன்னேன்  "  மன்னிக்கவும்  நண்பா  ராங் கால் போன்று இது  ராங்  sms  திருமனத்திற்கு  வந்தவர்க்கு  அனுப்பியது   உங்க பேருக்கும்  ஆட்ஆயிடுச்சு ."
  

Friday, June 29, 2012

சர்டிபிகட்

எனது  பத்தாம் வகுப்பு  தேர்வு  முடிந்து ரிசல்ட்  வந்த சமயம்  . நான்  தேறிவிட்டேன்  எனது  நண்பன்  ராம் குமாரோ  தவறிவிட்டான். அவனது  சித்தப்பா அவனை  கேலி  செய்தார் , அதற்க்கு  அவனோ  " சர்டிபிகட்  வச்சிக்கிட்டு   நாக்க வடிக்கறதா ?  " என்று  கேட்டு விட்டான்.  பிறகு
1999 இல்  கோனேரிராஜபுரம்  அக்கரை தெருவில்  இருந்து  கோயமுத்தூர்  சென்று  விட்டோம் .  மூன்று  ஆண்டுகள்  கழித்து   கோனேரிராஜபுரம் வந்தேன் ,கொஞ்சம்  வேலை இருந்தது அங்கு . அப்போது  சில   நண்பர்களை  கண்டு  நலம்  விசாரித்தேன் . அப்போது  ஒரு கிராம வாசி சொன்னார்   "உன் தோழன்   நம்ம  ராம்குமார்  கம்ப்யூட்டர்  படிக்க   கும்பகோணம்  போரம்பா " படிச்சு முடிச்சா  மலேசியா  வில்  வேலை கிடைக்கும்னு  சொன்னார் .
எனக்கு  அதிசயமாக  இருந்தது , இருந்தாலும்  கம்ப்யூட்டர்  படிப்பது  நல்ல விஷயம் தானே !  எனவே  சந்தோஷப்பட்டேன் .
மறுநாள்   எதோட்சையாக  ராம்குமாரை  கண்டபோது   கம்ப்யூட்டர்  மேட்டரை பத்தி  கேட்டேன் .
  "மாப்ள  நான்  கம்பி பிட்டர் ட்ரைனிங்  தான் போறேன் " என்றான் . அதன் பின் மீண்டும்  நான் கோயமுத்தூர்  போய்விட்டேன் .
சரியாக  இரண்டு வருடம்  ஓமன்( மஸ்கட் )  சென்று  வந்தேன் . மீண்டும்  கோனேரிராஜபுரம்  சென்றேன் . அப்போது  மீண்டும்  நண்பர்களை  கண்டு  பேசியபோது  நம்ம  ராம்குமார்  மலேயசியாவில்  safety officer  ஆக  உள்ளதாக  சொன்னார்கள் . அவன்  எப்போது  அதற்க்கான   படிப்பை  முடித்தான்  என்று கேட்டேன்! , தொடங்கினால் தானே முடிப்பதற்கு ?.  பணம் கொடுத்து  certificate  வாங்கியதாக  சொன்னார்கள் . எப்படியோ  நம்ம  நண்பன்  வெளிநாட்டில்  நல்ல வேலையில் இருந்தால் நல்லதுதான் .
ஆனாலும்  சர்டிபிகட்  என்பது  நாக்கு வடிக்க அல்ல  என்பது  தற்போது  புரிந்திருக்கும் .

Tuesday, June 19, 2012

கல்லி வல்லி !

கல்லி  வல்லி !

கல்லி  வல்லி  இந்த  ஒரு  வார்த்தை  மட்டும்  இல்லை என்றால்  மன ஆறுதல்  இல்லை  அரபு  நாடுகளில் . எத்தனை இன்னல்கள்   ஏற்பட்டாலும்   ஒரு  நிம்மதி  என்றால்  அது  கல்லி வல்லி  . இதன் பொருள்  போனால்  போகட்டும்  என்ற  அர்த்தத்தில்  கூறப் படுகிறது .
ஒரு நண்பர்  சொன்னார்  வெளிநாடு  செல்வதானால்   " வெட்கம்  சூடு  சொரணை   இருக்க கூடாது   குறிப்பாக  கோபம்  கூடவே  கூடாது "   நான்  தமாசு என்று  நினைத்தேன் , நான் பகரினில்  கால் வைக்கும்  நிமிஷம்  வரை .
90  விழுக்காடு  அடிமைகளாக   வேலை செய்ய  வேண்டியது தான் . அரபு  நாடுகளில்  வேலைக்கு  செல்லும்   பலருக்கும்   இது போல  பல அவமானங்கள்   நேர்வதுண்டு . ஆனல் இங்குள்ளவர்க்கு அந்த  வலி  சொல்லி புரிய வைக்க முடியாது .
சிலர்  மனைவியின்  தாலியை  அடகு வைத்து வந்தவர்களும்  உண்டு . அது போல் வருபவர்க்கு  ஒரு  துன்பம்  என்றால்  உடனே  நம்  நாட்டிற்கு  வந்துவிடவும்  முடியாது . அப்படி  வந்தால்  கடனை  எப்படி  அடைப்பது  என்று  பயம்  வந்துவிடும் .
எனக்கு  தைரியம்  சொன்ன  சில நண்பர்கள்  சொல்வது  கேட்டால்  அதிர்ச்சியளிக்கும்
"  நண்பா !   செத்தாலும்  இங்கியே  செத்துடுவேன்  ஊருல  போயி  கேவலப்பட மாட்டேன் "  என்று
இது வாவது  பரவாஇல்லை  சிலர்  வீட்டில்   "  செத்தா  அங்கேயே  சாவு "  என்று  சொன்னதாக  கேள்விபட்டேன் . என்ன கொடூரம் ,  இவ்வளவு   கஷ்ட பட்டும்   பணம்  சேர்த்து  பின்  இந்தியா திரும்பும்போது  நமது  மண்ணில்  கால் வைக்கும் பொது   யாருக்கும்  தெரியாமல்   தெரிந்தாலும்  வெட்கப்பட தேவை இல்லை    சட்டென்று குனிந்து  ஒரு  முத்தம்   நம் மண்ணில்  பதிக்கும் போது
கண்களில்  நீர்    தவிர்க்க  இயலாதது .      என்னை  அறியாமல்  முனுமுனுத்தேன்
"   கல்லி  வல்லி ! "
 

Thursday, June 14, 2012

அனிதா எங்கே ?

1996 -99 இல்  கும்பகோணம்  அரசு ஆடவர்  கல்லூரியில்  படிக்கும்போது தினமும் பேருந்து  தடம்  எண் 46 இல்  செல்வது வழக்கம் ,அணைத்து நண்பர்களும்  அதில் வருவார்கள்  அன்னியூரில்  இருந்து  பேருந்து புறப்படும் , வடமட்டம்  நிறுத்தத்தில்  நானும் இளையராஜாவும்  ஏறுவோம்  ஆடுதுறை  வழியாக  கும்பகோணம்  வந்தடையும் , பல  நேரம்  கலாட்டாக்களும் உண்டு .
        தினமும்   செட்டிமண்டபத்தில்   ஏறுவாள்  அனிதா ,எங்கள்  நட்பு தொடர்ந்தது .2000 தில் குடும்பத்துடன்  கோயமுத்தூர்  இடபெயர்சி  செய்தோம் . அனால் அவளுடன் தொடர்பு  முறிந்துவிட்டது . காரணம்  நான்  பகரின்  சென்றுவிட்டேன் .நான்கு  ஆண்டுகள்  கழித்து  2004 இல் கும்பகோணம்  சென்றபோது  மறக்காமல் (?) செட்டிமண்டபம்  சென்றேன் .
        பழைய  நினைவுடன்   நடந்து  சென்று  அவள் வீட்டை  அடைந்தேன் .அழைப்பு  மணி அடித்தவுடன்  ஓடிவந்து  கதவு  திறந்து  பேசாமல் நின்றாள் . நான்  பேசினேன் 
 "  அனிதா   சௌக்யமா "
  "என்ன  தெரியல ?"

     " sorry  அனிதா  கல்யாணமாயி  போயிட்டா'
      " நான்  அவள் தங்கை "
" இட்ஸ்   ஓகே!  கேட்டதா சொல்லுங்க "
என் பெயர் கூட  சொல்லாமல்  வந்துவிட்டேன் .

Tuesday, June 12, 2012

மன கணக்கு

நான்  முதன் முதலாக  கால்குலேட்டரை  கண்டது   1988 களில் தான்
எங்கவூர்  சொசைட்டி  செகரட்டரி   S M T ராஜேந்திரன்  கையில் தான் . எப்போதும்  கையில்  வைத்து  பயன்படுத்துவர் . தற்கால  லேப்டாப் போல ,எனக்கு அதை  தொட்டு பார்க்க  வெகு நாளாக  ஆசை  ஆனால்  அவரிடம் கேட்டதில்லை . பிறகு  மூன்று வருடம் கழித்து  பக்கத்துக்கு வீட்டு பழைய  நண்பன்  ராம் குமார்  கையில்  ஒரு புதிய  வெளிநாட்டு  கால்குலேட்டர் .அவனது சித்தப்பா  துபாய் லிருந்து  கொண்டுவந்தது .தொட்டு பார்க்க கேட்டேன்  அவன்  கொடுக்கவில்லை . சில நேரங்களில் அதை நினைத்து வருத்தப் படுவேன்  பிறகு மறந்து விடுவேன்
நான்  +1  படிக்கும்போது   என் தந்தை  எனக்கு ஒரு கால்குலேட்டர்   பகரினில்  இருந்து கொடுத்துவிட்டார் ,எனக்கு நன்றாக  நினைவு உள்ளது  எனது  பள்ளி  பதிவு என் உள்பட அது  94R711 .
1994 களில்  அவனியாபுரத்துல + 1 சேர்ந்தது .
அவ்வாறு  நான் கேட்காமலேயே  என் தந்தை  எனக்கு  அளித்த  அந்த கால்குலேட்டரை   கும்பகோணத்தில்  150  ரூபாய்க்கு  விற்று  பாண்டிச்சேரி  ஓடிவிட்டேன்  காரணம்   ஜான்  சுந்தர் ராஜ் என்ற  ஆங்கில  ஆசிரியரின்  தொந்தரவு  தாங்க முடியாமல் .
மறு நாளே வீடு திரும்பியது  வேறு கதை .
இதை  ஏன்  இங்கு  சொல்கிறேன்  என்றால் , கால்குலேட்டர்  இல்லாத  கலத்தில்  போட்ட  மனக்கணக்கு  இன்றைய  கலத்தில்  வருவதில்லை. கால்குலேட்டர்  இல்லாத இல்லாத  கணக்கு  ஆமணக்கு   சிலருக்கு  ஆமணக்கு  எண்ணெய்  என்று சொன்னாலும்  தவறு இல்லை .

கவிதை !

ஒப்பீடு
மற்றவர் போல்
என்னவளின்  முகத்தை
நிலவுக்கு  ஒப்பிட மாட்டேன் !
காரணம்
அதையும்  சிலர்  மிதித்து விட்டார்கள் !