எனது பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்து ரிசல்ட் வந்த சமயம் . நான்
தேறிவிட்டேன் எனது நண்பன் ராம் குமாரோ தவறிவிட்டான். அவனது சித்தப்பா
அவனை கேலி செய்தார் , அதற்க்கு அவனோ " சர்டிபிகட் வச்சிக்கிட்டு நாக்க வடிக்கறதா ? " என்று கேட்டு விட்டான். பிறகு
1999 இல் கோனேரிராஜபுரம் அக்கரை தெருவில் இருந்து கோயமுத்தூர் சென்று விட்டோம் . மூன்று ஆண்டுகள் கழித்து கோனேரிராஜபுரம் வந்தேன் ,கொஞ்சம் வேலை இருந்தது அங்கு . அப்போது சில நண்பர்களை கண்டு நலம் விசாரித்தேன் . அப்போது ஒரு கிராம வாசி சொன்னார் "உன் தோழன் நம்ம ராம்குமார் கம்ப்யூட்டர் படிக்க கும்பகோணம் போரம்பா " படிச்சு முடிச்சா மலேசியா வில் வேலை கிடைக்கும்னு சொன்னார் .
எனக்கு அதிசயமாக இருந்தது , இருந்தாலும் கம்ப்யூட்டர் படிப்பது நல்ல விஷயம் தானே ! எனவே சந்தோஷப்பட்டேன் .
மறுநாள் எதோட்சையாக ராம்குமாரை கண்டபோது கம்ப்யூட்டர் மேட்டரை பத்தி கேட்டேன் .
"மாப்ள நான் கம்பி பிட்டர் ட்ரைனிங் தான் போறேன் " என்றான் . அதன் பின் மீண்டும் நான் கோயமுத்தூர் போய்விட்டேன் .
சரியாக இரண்டு வருடம் ஓமன்( மஸ்கட் ) சென்று வந்தேன் . மீண்டும் கோனேரிராஜபுரம் சென்றேன் . அப்போது மீண்டும் நண்பர்களை கண்டு பேசியபோது நம்ம ராம்குமார் மலேயசியாவில் safety officer ஆக உள்ளதாக சொன்னார்கள் . அவன் எப்போது அதற்க்கான படிப்பை முடித்தான் என்று கேட்டேன்! , தொடங்கினால் தானே முடிப்பதற்கு ?. பணம் கொடுத்து certificate வாங்கியதாக சொன்னார்கள் . எப்படியோ நம்ம நண்பன் வெளிநாட்டில் நல்ல வேலையில் இருந்தால் நல்லதுதான் .
ஆனாலும் சர்டிபிகட் என்பது நாக்கு வடிக்க அல்ல என்பது தற்போது புரிந்திருக்கும் .